பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தொல்காப்பியம் நுதலியபொருள் றெழுத்தினை (விகுதியினை) உடையன அல்ல. அவைதாம் உயர் திணைப் பெயராய் நின்று ஆண்பாற்சொல் முதலியவற்றின் விகுதியினையே தம் வினைக்கீருகப்பெற்று இன்னபால் என விளங்கி நிற்பனவாம். இவற்றின் இயல்பினை இவ்வியல் ச-ஆம் சூத்திரத் தால் ஆசிரியர் தெளிவுபடுத்துகின்ருர். னகரமாகிய மெய்யெழுத்தை இறுதியாகவுடையது ஆண் பாற் சொல்லாம். ளகர மெய்யை இறுதியாகவுடையது பெண் பாற் சொல்லாம். ரகர மெய்யும் பகரவுயிர்மெய்யும் மார் என்னும் சொல்லும் ஆகிய இம்மூன்றனுள் ஒன்றை யிறுதியாகவுடைய சொல் பலர்பாற் சொல்லாம். து, று, டு எனவரும் மூன்றெழுத்துக் களுள் ஒன்றையிறுதியாகப்பெற்றசொல் ஒன்றன்பாற்சொல்லாம். அ, ஆ, வ என்பவற்றுள் ஒன்றை யிறுதியாகப்பெற்றது பலவின் பாற் சொல்லாம். இவ்வாறு இருதிணைக்கண்ணும் ஐந்துபாலும் விளங்க இறுதியில் நின்ருெலிக்கும் இப்பதினுேரெழுத்தும் வினைச் சொல்லிடத்தேதான் தெளிவாகப் புலப்படுவன. இவை பெய ரொடு வருவழித் திரியின்றி ஐம்பாலே விளக்கும் ஆற்றலுடையன அல்ல. எனவே "இருதிணைமருங்கின் ஐம்பாலறிய ஈற்றில் நின்று இசைக்கும் பதினேரெழுத்தும் தோற்றந் தாமே வினையொடு வருமே” என்ருர் தொல்காப்பியஞர். இதனுல் இருதிணை ஐம்பால் களையும் ஒருவன் சொல்லகத்து அறியுமாறு இவ்வாறென ஆசிரியர் விளக்கினமை காண்க. இருதிணையுள் ஒருதிணைச்சொல் ஏனைத் திணைச்சொல்லொடு முடிவது திணைவழு. ஒருதினையுள் ஒருபாற்சொல் அத்திணையி லுள்ள ஏனைப் பாற்சொல்லொடு முடிவது பால்வழு. தன்மை, முன்னிலே, படர்க்கையாகிய மூவிடச் சொற்களுள் ஓரிடச்சொல் பிறவிடச் சொல்லொடு முடிவது இடவழு இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் மூன்று காலங்களுள் ஒரு காலத்தினைக் குறித்த சொல் ஏனேக் காலச்சொல்லொடு முடிவது காலவழு. வினவுக்கு