பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக் தொல்காப்பியம் நுதலியபொருள் சார்பும் என இரண்டு வகைப்படும். அவற்றுள் கருமச் சார்பாவது துணைச்சார்ந்தான் என்ருற்போல ஒன்றையொன்று மெய்யுற்றுச் சார்தலாகும். கருமமல்லாச் சார்பென்பது அரசரைச் சார்ந்தான் என்ருற்போல ஒன்றையொன்று மெய்யுறுதலின்றி வருவதாகும். இவற்றுள் கருமமல்லாத சார்புபொருண்மை தனக்குரிய இரண்டாம் வேற்றுமையாகிய செயப்படு பொருளில் நீங்காது அரசர்கட் சார்ந்தான் என ஏழாம் வேற்றுமைக்குரிய இடப் பொருளிலும் மயங்கினமை காணலாம். இவ்வாறே தொல் காப்பியனுர் கூறிய ஏனைய வேற்றுமைப் பொருள் மயக்கங்களை யும் பகுத்துணர்ந்து கொள்ளுதல் பயில்வோர் கடனுகும். இனி உருபு மயக்கமாவது ஒரு வேற்றுமைக்குரிய உருபு தனக்குரிய வேற்றுமைப் பொருளை விட்டுப் பிறிதொரு வேற் றுமைப் பொருளிற் சென்று மயங்குதல், நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற முளை' என்புழி நாணற் கிழங்கு மணலிடத்தே தோற்றுவித்த முளையென்பது பொருளாதலால், மணற்கண் எனக் கண்ணுருபு நிற்க வேண்டிய ஏழாம் வேற்றுமைப் பொருளிடத்தே மணற்கு என நான்காம் வேற்றுமை யுருபு மயங்கியதெனக் கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு ஒரு தொடர் எந்த வேற்றுமை யுருபிற்ை சொல்லப்பட்டாலும் அவ்வுருபிற்கேற்பப் பொருளை மாற்ருமல் பொருளுக்கேற்ப உருபினை மாற்றிக் கொள்ளுதல் வேண்டுமென்பார், 'யாதனுருபிற் கூறிற்ருயினும் பொருள் செல்மருங்கின் வேற்றுமைசாரும்' என்ருர் ஆசிரியர். வேற்றுமை யுருபுகள் ஒன்றும் பலவுமாகத் தொடர்ந்து அடுக்கி, முடிக்குஞ் சொல்லொன்ருல் முடிதலும், அவ்வுருபுகள் ஒரு தொடரின் இடையிலே யன்றி இறுதியிலும் நிற்றலும், இங்ங்ணம் இறுதியிலும் இடையிலும் விரிந்து நின்ற எல்லா வுருபுகளும் முடிக்குஞ் சொல்லொன்றினுல் முடிதலே