பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேற்றுமை மயங்கியல் 45 யன்றித் தனித்தனி முடிக்குஞ் சொல்லைப் பெற்று முடிதலும், விரிந்து நிற்பதாகிய தொகாநிலைத் தொடரின்கண்ணே நின்ற அவ்வுருபுகள் மறைந்து நிற்றலும் உளவென்பதும், தொடரிறுதி யிலே மறைந்து நிற்றற்குரிய உருபுகள் ஐயுருபும் கண்ணுருபுமே யன்றி ஏனைய அல்லவென்பதும், கு, ஐ, ஆன் என்னும் இவ்வுருபு கள் அகரம் பெற்றுத் திரிவனவென்பதும், ஒரு வேற்றுமையின் பொருள் சிதையாமல் அதன்கண் பிறிதொரு வேற்றுமையின் உருபு மயங்கி நிற்றல் கூடுமென்பதும், அவ்வாறு நான்காம் வேற்றுமை:யுருபு பிறவேற்றுமைகளின் பொருள் சிதையாமல் மயங்கி நிற்கும் இடங்கள் இவை யென்பதும், இங்ஙனமே ஏனை யுருபுகளும் வழக்கு நடையை யொட்டி மயங்கி வருதலால் அவை குற்றமுடையன அல்லவென்பதும் ஆகிய உருபு மயக்கம்பற்றிய விதிகளை இவ்வியலில் 19 முதல் 28 வரையுள்ள சூத்திரங்களால் ஆசிரியர் தெளிவுபடுத்துகின்ருர். இவ்வேற்றுமைகளை முடிக்குஞ் சொல்லாயும் ஏற்குஞ் சொல்லாயும் வருவன வினையும் பெயருமாதலின் வினைச்சொல் லால் அறியப்படுந் தொழிற்காரணங்களையும் பெயர்ச்சொல்லால் அறியப்படும் பொருள் வேறுயாட்டினையும் ஆசிரியர் இவ்வியலிற் கூறுகின்ருர், வினை, செய்வது, செயப்படுபொருள், நிலம், காலம், கருவி என்னும் ஆறுடனே இன்னதற்கு, இது பயன் என வரும் இரண்டினையுங் கூட்டத் தொழிலுக்குரிய காரணங்கள் எட்டாமென்றும், எல்லாத் தொழிற்கும் இவ்வெட்டும் வருமென் னும் இன்றியமையாமையில்லை; இவற்றுள் சில தொழிற்கண் ஒன்றிரண்டு குறையத்தக்கன வழக்கின்கண் குறைந்துவரு மென்றும் வினைக்குரிய முதனிலைகளைக் குறித்து ஆசிரியர் விளக்கியுள்ளார். ஒரு பொருளின் இயற்பெயர் மற்ருெரு பொருளுக்கு ஆகி வருவது ஆகுபெயராம். முதலுக்குரிய இயற்பெயரால் சினைப்