பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேற்றுமை மயங்கியல் 4? ரொட்டும் ஆரும் வேற்றுமைப்பொருள் மயக்கம். பிறந்தவழிக் கூறல் ஏழாம் வேற்றுமைப் பொருள் மயக்கம். இயன்றது மொழி தலும் வினைமுதலுரைக்குங் கிளவியும் மூன்ரும் வேற்றுமைப்பொருள் மயக்கம்” எனத் தெய்வச்சிலையாரும் கூறியவை இவண் கருதத் தக்கனவாம். ஆகவே வேற்றுமைப் பொருண்மயக்கமாகிய ஒப்புமை கருதி ஆகுபெயரிலக்கணம் இவ்வியலின் இறுதிக்கண் கூறப்பட்டதென்பது பழைய உரையாசிரியர்களின் கருத்தாதல் நன்கு பெறப்படும். ஆகுபெயர்ச் சூத்திரத்தின்கண்வரும் இருபெயரொட்டென் பதற்குப் பொற்ருெடி யென உதாரணங்காட்டினர் இளம்பூரணர். அதனையுணர்ந்த சேவைரையர் இருபெயரொட்டென்பதற்கு 'அன்மொழித் தொகைமேல்வரும் இருபெயரொட்டு” எனப் பொருள் கூறியதோடு தொகையாத லுடைமையால் எச்சவியலு ளுணர்த்தப்படும் அன்மொழித் தொகை இயற்கைப்பெயர் ஆகு பெயர் என்னும் இருவகைப் பெயருள் ஆகுபெயரென ஒன்ருயடங் குதல் பற்றி ஈன்டுக் கூறப்பட்டது என விளக்கமுங் கூறியுள்ளார். "பொற்ருெடி யென்பது அன்மொழித் தொகையாவதன்றி ஆகு பெய ராகாதெனக்கண்டுணர்ந்த நச்சினர்க்கினியர் இருபெய ரொட்டென்பதற்கு அன்மொழிப் பொருள் மேல் நில்லாத இரு பெயரொட்டு' எனப் பொருள்கூறி மக்கட்சுட்டு, என அதற்கு உதாரணமுங் காட்டினர். மக்கள்-சுட்டு என்னும் இருபெயரும் ஒட்டி நின்று மக்களாகிய சுட்டப்படும் பொருள் என்னும் பொருளைத்தந்தன. இதன்கண் சுட்டு என்னும் பெயர் சுட்டப் படும் பொருளையுணர்த்தி ஆகுபெயராய் நிற்ப, மக்கள் என்னும் முதன்மொழி அவ் வாகுபெயர்ப் பொருளை விசேடித்து நிற்க இங்ங்ணம் இருபெயரும் ஒட்டிநின்றனவாதலின் இருபெயரொட் டென்ருர் ஆசிரியர். இதன்கண் பின்னுள்ள மொழியே ஆகு பெயராய் நின்றதாதலின் இதனைப் பின்மொழி யாகுபெயரென் பாருமுளர். இனி பொற்ருெடி என்னும் தொடரின்கண் பொன்