பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தொல்காப்பியம் நுதலியபொருள் என்னும் முதல்மொழி இவ்வாறு அன்மொழித் தொகைப்பொருளே விசேடித்து நில்லாது தொடி யென்னும் இயற்பெயர்ப் பொருளையே விசேடித்து நிற்க அவ்விரு சொற்களின் தொகையாற்றலால் அவ் விரண்டுமல்லாத மற்ருெரு மொழியின் பொருள் தோன்றக் காண்கின்ருேம். எனவே மக்கட்சுட்டு என ஆகுபெயராய்வரும் இருபெயரொட்டும் பொற்ருெடியென அன்மொழித் தொகைமேல் வரும் இருபெயரொட்டும் தம்முள் வேறெனவே உணர்தல் வேண்டும். இருபெயரொட்டென்பது, இரண்டு பெயர் தொக்கு ஒரு சொல் நீர்மைப்பட்டு மற்ருெரு பொருள் தரு பெயராகி வருவது எனக்கூறித் துடியிடை யென்பது துடிபோன்ற இடை யினையுடையாளே யுணர்த்தி ஆகுபெயராயிற்று என உதாரணங் காட்டி விளக்கிய தெய்வச்சிலையார், ஆகுபெயராவது ஒட்டுப்பட்ட பெயரோடு ஒற்றுமைப்பட்டுவரும் என்றும் அன்மொழித் தொகை யாவது அப்பொருளின் வேறுபட்டு வருமென்றும் அத்தன்மை யுடையதாதல் அன்மொழி என்ற சொல்லாலேயே விளங்கு மென்றும் அவ்விரண்டிற்கும் வேறுபாடு காட்டினர். எனினும் அவர் இருபெயரொட்டாகு பெயர்க்குக்காட்டிய துடியிடை யென்பதும் சேனவரையர் காட்டிய பொற்ருெடி யென்பதுபோல இரண்டு பெயருந்தொக்க தொகையாற்றலால் அதனையுடையாள யுணர்த்திய அன்மொழி தொக்கு நின்றதெனக் கொள்ளுதற்கும் இடமுண்டாதலின் அதனை ஒருதலையாக ஆகுபெயரெனத் துணி தற்கில்லை. ஆகுபெயரென்றும் அன்மொழித்தொகையென்றும் வேறுவேறு இலக்கணமுடையனவாக ஆசிரியர் கூறுதலால் ஆகுபெயரும் அன்மொழித் தொகையும் தம் பொருளுணர்த்தாது பிறிது பொருளுணர்த்தலான் ஒக்குமாயினுங் ஆகுபெயர் ஒன்றன் பெயரான் அதனோடு தொடர்புடைய பிறிது பொருளையுணர்த்தி ஒருமொழிக் கண்ணதாய் வருமென்றும் அன்மொழித்தொகை அத்தகைய தொடர்பெதுவும் வேண்டாது இருமொழியுந் தொக்க தொகையாற்றலால் பிறிது பொருளுணர்த்தி இருமொழிக்கண் வருமென்றும் இவையே இரண்டிற்கும் வேறுபாடென்றும்