பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினேயியல் 55 குறிப்பினுல் இனிது புலனுதல் காண்க. இங்கே பன்மை சுட்டிய பெயரென்பது வெண்குடைப் பெருவிறல் என்பதுபோல ஒருமையியைபு நீக்காது இயைபின்மை மாத்திரை நீக்கிப் பன்மை சுட்டும் என்பதுபட நின்றது" என்பர் சேவைரையர். இச்சூத் திரத்திற் கூறியவாறு பன்மை சுட்டிய பெயர் உயர்திணைப் பன்மையையுணர்த்தா தொழிதலும் ஏனைபொருமைகளை யுணர்த்து தலும் பொருந்தாவென்பது கருதி இத்தொல்காப்பியச் சூத்திரக் கருத்தை மறுத்தல் என்னும் மதம்பட அவற்றுள் ஒன்றேயிரு, திணைத் தன்பாலேற்கும் என நன்னூலார் சூத்திரஞ் செய்தா ரென்பர் சங்கர நமச்சிவாயர், பன்மை சுட்டிய பெயரென்றது உயர்திணை ஆளுெருமை பெண்ணுெருமை அஃறிணையொருமை பன்மை ஆகிய பல பால்களையும் சுட்டி நிற்றலின் இனமுள்ள அடைமொழியே யென்பதும் எவ்வகையால் நோக்கினும் ஆசிரியர் தொல்காப்பியனர் கருத்து மறுக்கத்தக்கதன்றென்பதும் சிவஞான முனிவர் கருத்தாகும். ஒருவரென்னும் பெயர்ச்சொல் ஒருவன் ஒருத்தி யென்னும் இருபாற்கும் பொதுவாய் வழங்கும். அச்சொல் பொருளால் ஒருடிையைக் குறிப்பதாயினும் பலர்பாற் சொல்லோடு தொடரும் இயல்புடையதாகும். பெண் மகன் என்னும் பெயர் பெண்பால் வினைகொண்டு முடியும். பெயர்களின் ஈற்றயலிலுள்ள விகுதி ஆகாரம் செய்யுளுள் ஒகாரமாகத் திரியும். செய்யுளிலே கருப் பொருள்களின்மேல் வழங்கும் இருதினைப் பொதுப் பெயர்களுள் அவ்வந்நிலத்து மக்களால் அஃறிணைப் பொருளுக்கே யுரிமை யுடையனவாய் வழங்கும் பெயர்கள் உயர்திணையை யுணர்த்தா வென்பர் ஆசிரியர். வினேயியல் வினையென்பது பலபொருளொருசொல்லாய்த் தொழிற் பண்பினையும் அதன் காரியமாகிய வினைநிகழ்ச்சியையும் உணர்த்