பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினே யியல் 59 அஃறிணைக்குரியன: அ, ஆ, வ என்னும் இறுதியையுடைய மூவகை வினைச் சொற்களும் அஃறிணைப்பன்மைப் படர்க்கையாம். து, று, டு என்பவற்றை யிறுதியாக உடையன அஃறிணை ஒருமைப்பாற்குரிய வினைச்சொற்களாம். இங்கெடுத்துக் காட்டிய அறுவகையீற்றுச் சொற்களே அஃறிணைக்குரிய வினைச்சொற்களாம். வினப் பொருளையுடைய எவன் என்னும் வினைக் குறிப்புச்சொல் அஃறிணை யிருபாலுக்கும் ஒப்பவுரியதாகும். இன்று, இல உடைய, அன்று, உடைத்து, அல்ல, உள என்பனவும் பண்புகொள் கிளவியும் பண்பிகிைய சினைமுதற் கிளவியும் ஒப்புப்பற்றி வருஞ்சொல்லும் ஆகிய இப்பத்தும் அஃறிணை வினைக்குறிப்புச் சொற்களாம். மேல் அஃறிணை வினைச்சொற்கீருய் நின்று பாலுணர்த்து மெழுத்துக் களே அஃறிணை வினைக் குறிப்புச் சொற்கண்ணும் ஈருய் நின்று பால் விளக்குவன. இருதிணைக்குமுரியன: முன்னிலை வினைமுற்று, வியங்கோள் முற்று, வினையெச்சம், இன்மையையுணர்த்தும் இல்லை, இல் என்பன. வேறு என்னும் சொல், செய்ம்மன என்னும் வாய்பாட்டு முற்று, முற்றும் பெய ரெச்சமுமாகிய செய்யுமென்னும் வாய்பாட்டு வினைச்சொல், செய்த என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம் ஆகிய எண்வகை வினைச்சொற்களும் இருதிணைச் சொல்லாதற்கும் ஒத்த உரிமை யுடையனவாம். மேற்கூறப்பட்ட விரவு வினைகளுள் இ, ஐ, ஆய் என்னும் இறுதியையுடைய முன்னிலை வினைச்சொற்கள் ஒருவன், ஒருத்தி, ஒன்று என்னும் இருதின முக்கூற்ருெருமைக்கும் ஒப்பவுரியன. இர், ஈர், மின் என்னும் இறுதியையுடைய முன்னிலை வினைச் சொற்கள் உயர்திணைப் பலர்பாலுக்கும அஃறிணைப் பலவின் பாலுக்கும் ஒப்பவுரியன. முன்னிலை வினையல்லாத ஏனை எழு