பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్ష3 தொல்காப்பியம் நுதலியபொருள் வகை வினைச்சொற்களும் இருதிணை ஐம்பால் மூவிடத்திற்கும் பொதுவாய் வருவன. அவற்றுள் வியங்கோள், வினை முன்னிலை தன்மையென்னும் இரண்டிடத்திலும் நிலைபெருது. நிகழ்கால முணர்த்தும் செய்யுமென்னும் மூன்று பலர்பாற் படர்க்கையிலும் தன்மை முன்னிலைகளிலும் வருதலில்லை. மற்ருெரு வினைச்சொல்லோடு கூடியல்லது முற்றுப்பெருத, குறைச்சொல் வினையெச்சமாகும். செய்து, செய்யூ, செய்பு, செய்தென, செய்யியர், செய்யிய, செயின், செய், செயற்கு என வரும் இவ்வொன்பது வாய்பாட்டுச் சொற்களும் பின், முன், கால், கடை, வழி, இடத்து என்பவற்றை யிறுதியாக வுடையன வும் இவைபோலக் காலமுணர்த்தி வருவன பிறவும் வினையெச்ச வினைகளாம். இவற்றுள் முதலிலுள்ள செய்து, செய்யூ, செய்பு என வரும் மூன்றும் தனக்குரிய வினை முதல் வினையையே கொண்டு முடிவன. அவை மூன்றும் சினை வினையாங்கால் தமக் குரிய முதல் வினையைக்கொண்டு முடியினும் தம்தொழிலைக் கொண்டு முடிந்தனவே. இம்மூன்றுமல்லாத பிற வினையெச்சங் கள் தம் வினை முதல் வினையையேனும் அன்றி அங்கு வந்து இயையும் பிற வினைமுதல் வினையையேனும் வரையறையின்றிக் கொண்டு முடியுமியல்பினவாம். வினையெச்சங்கள் பல வாய் பாட்டான் அடுக்கிவரினும் முன்னின்ற எச்சம் முடிய ஏனையவும் பொருளால் முடிந்தனவேயாம். பெயரை ஒழிபாகவுடைய வினைச்சொல் பெயரெச்சம் அது செய்யும், செய்த எனவரும் இரு வாய்பாடுகளில் அடங்கும். நிலப்பெயர், பொருட்பெயர், காலப்பெயர், கருவிப்பெயர். வினே முதற்பெயர், வினைப்பெயர் எனவரும் அறுவகைப் பெயர்களையும் கொண்டு முடிதற்கேற்ற பொருள் நிலமையையுடைய இப்பெய ரெச்சம் இருதினை யைம்பாற்கு முரிய பொது வினையாகும். செய்யும் என்னும் வாய்பாட்டுச் சொற்கள் பெயரெச்சமாங்கால் முன் செய்யுமென்னும் முற்றிற்கு விலக்கப்பட்ட பல்லோர்