பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 தொல்காப்பியம் நுதலியபொருள் மொழிக்கு முன்னும் பின்னும் வருமாயினும் பெரும்பான்மையும் இடைவருதலின் இடைச்சொல்லாயிற்று என்பர் சேனவரையர். இடைச்சொல்லாவது பெயரும் வினையும்போலத் தனித்தனியே பொருளுணர உச்சரிக்கப்படாது பெயர் வினைகளைச் சார்ந்து புலப்படுமென்றும் பெயரும் வினையும் இடமாகநின்று பொரு ளுணர்த்தலின் இடைச்சொல்லாயிற்றென்றும் கூறுவர் தெய்வச் சிலையார். பொருளையும் பொருளது புடைபெயர்ச்சியையுந் தம்மா லன்றித் தத்தங்குறிப்பாலுணர்த்துஞ் சொற்கள் பெயர்ச்சொல் வினைச்சொற்களுமாகாது அவற்றின் வேறுமாகாது இடைநிகரன வாய் நிற்றலின் இடைச்சொல்லெனப்பட்டன என்பர் சிவஞான முனிவர். இவ்வியலிலுள்ள சூத்திரங்கள் .ே இவற்றை 47-ஆகக் கொள்வர் தெய்வச்சிலையார். இடைச்சொல்லென்று சொல்லப்படுவன பெயரும் வினையும் உணர்த்தும் பொருளைச் சார்ந்துநின்று அவற்றையே வெளிப் படுத்து நிற்றலல்லது தமக்கென வேறு பொருளில்லாதன என்பர் ஆசிரியர். எனவே அவை பொருளுணர்த்தும்வழிப் பெயர்ப் பொருண்மை யுணர்த்தியும் வினைப்பொருண்மை யுணர்த்தியும் வருவன என்பது பெறப்படும். ஒரு சொல்லோடு ஒரு சொல் புணர்ந்தியலும் வழி அப் பொருள் நிலைக்கு உதவியாகி வருவனவும், வினைச்சொற்களை முடிக்குமிடத்து அச்சொல்லகத்துக் காலங்காட்டும் உறுப்பு முதலியனவாய் நிற்பனவும், வேற்றுமையுருபுகளாய் வருவனவும், தமக்கெனப் பொருளின்றிச் சார்த்திச் சொல்லப்படும் அசைநிலை களாய் நிற்பனவும், இசைநிறைக்க வருவனவும், தத் தங்குறிப்பாற் பொருளுணர்த்துவனவும். ஒப்புமையுணர்த்தும் உவமவுருபுகளாய் வருவனவும் என இடைச்சொற்கள் எழுவகைப்படுமென்பர் தொல்காப்பியர். அவற்றுள் புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்குதவுந' என்றது அல்வழிப் பொருளுக்கு உரியன இவை வேற்றுமைப் பொருளுக்கு உரியன இவையென எளிதில்