பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§4 தொல்காப்பியம் நுதலியபொருள் சொல்லாகி நிற்கும், இது குறையின்றி நிற்றலின் இடைச் சொல்லாயிற்று என்ருர் தெய்வச்சிலையார், அசைநிலையாகவும் இசைநிறையாகவும் வரும் இடைச் சொற்களை 22-முதல் 32வரையுள்ள சூத்திரங்களால் எடுத்துரைத்தார். உயிரெழுத்துக் களுள் ஒளகாரமல்லாத நெடில்கள் ஆறும் இரட்டித்தும் அள பெடுத்தும் தனித்தும் இடைச்சொற்களாய் நின்று ஒசையாலும் குறிப்பாலும் பொருளுணர்த்தும் முறையினை 38-ஆம் சூத்திரத் திலும், நன்றே, அன்றே, அந்தோ, அன்னே என்பவற்றின் இறுதி நின்ற ஏகாரமும் ஒகாரமும் குறிப்பாற் பொருளுணர்த்து முறையினை 34-ஆம் சூத்திரத்திலும், மேற்கூறிய இடைச் சொல்லின்கண் இலக்கண வேறுபாடுகளையெல்லாம் 35-முதல் 46-வரையுள்ள சூத்திரங்களிலும் ஆசிரியர் விரித்துக் கூறியுள்ளார். மேற்கூறப்பட்ட இடைச்சொற்களில் இச்சொல்லுக்கு இது பொருள் என நிலைபெறச் சொல்லப்பட்டனவாயினும் அச்சொற் களின் முன்னும் பின்னும் நின்ற வினையோடும் பெயரோடும் இயைத்து நோக்க அச்சொற்கள் முற்கூறியவாறன்றி வேறு பொருளவாயும் அசைநிலையாயும் தி ரி ந் து வேறுபடினும் அவற்றின் பொருள் நிலையை ஆராய்ந்துணர்தல் வேண்டுமென வும், இங்கெடுத்துரைத்த இடைச்சொற்களேயன்றி இவைபோல் வன பிற வரினும் அவற்றையும். இங்குச் சொல்லியவற்றின் இலக்கணத்தால் உணர்ந்து வகைப்படுத்துக்கொள்ளுதல் வேண்டுமெனவும் இவ்வியலிறுதியிலுள்ள புறனடைச் சூத்திரங் களால் ஆசிரியர் அறிவுறுத்துகின்ருர். இதனுல் ஆசிரியர் காலத்து வழங்கிய தமிழ்ச்சொற்களின் பரப்பும் இருவகை வழக்கினும் சொற்கள் பொருளுணர்த்தும் நெறியின் விரிவும் இனிது புலளுதல் காணலாம், உரியியல் உரிச்சொற்களின் இலக்கண முனர்த்தினமையால் உரியிய லென்னும் பெயர்த்தாயிற்று. இசை, குறிப்பு, பண்பு என்னும்