பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரியியல் 65 பொருளை யுடையனவாகிப் பெயர் வினைகளைப் போன்றும் அவற்றிற்கு முதனிலையாகியும் வருவன உரிச்சொற்களாம். இசை செவியால் உணரப்படுவது, குறிப்பு மனத்தாற் குறித் துணரப்படுவது, பண்பு ஐம்பொறிகளால் உணரப்படுங் குணம். இசை குறிப்பு பண்பு என்னும் பொருட்குத் தாமே யுரியவாதலின் உரிச்சொல்லாயினவென்றும் பெரும்பான்மையும் செய்யுட்குரிய வாய் வருதலின் உரிச்சொல்லாயிற்றென்பாருமுளரென்றும் கூறுவர் சேனவரையர், ஈறுபற்றிப் பல பொருள் விளக்கலும் உருபேற்றலுமின்றிப் பெயரையும் வினையையுஞ்சார்ந்து பொருட் குணத்தை விளக்கலின் உரிச்சொல் பெயரின் வேறென்பர் நச்சினர்க்கினியர். ஒரு வாய்பாட்டாற் சொல்லப்படும் பொருட் குத் தானும் உரித்தாகி வருவது உரிச்சொல்லென்றும், ஒரு சொல் பல பொருட்குரிமை தோன்றினும் பல சொல் ஒரு பொருட்குரிமை தோன்றினும் என ஆசிரியர் கூறுதலால் இவ் வியல்பு புலளுமென்றும், எழுத்ததிகாரத்துள் இதனைக் குறைச் சொற்கிளவியென்று ஒதினமையால் வடநூலாசிரியர் தாது எனக் குறியிட்ட சொற்களே உரிச்சொற்களாமென்றும், தொழிற் பொருண்மை யுணர்த்தும் சொற்கள் யாவும் உரிச்சொல்லாயினும் வழக்கின்கட் பயிற்சியில்லாத சொற்கள் ஈண்டு எடுத்தோதப் படுகின்றனவென்றும், தொழிலாவது வினையுங் குறிப்புமாதலின் அவ்விருவகைச் சொற்கும் அங்கமாகி வெளிப்படாதன இவ் வியலிற் கூறப்படுகின்றனவென்றும், ஈண்டுக் கூறப்படுகின்ற உரிச்சொல் சொல்லானும் குறிப்பானும் குணத்தானும் பொருள் வேறுபடுமென்றும், அவை பெயர் வினைகளைச்சார்ந்தும் அவற்றிற்கு அங்கமாகியும் வருமென்றும் கூறுவர் தெய்வச்சிலை யார். இசை, குறிப்பு, பண்பு என்னும் மூன்றும் குணப் பண்புந் தொழிற் பண்புமென இரண்டா யடங்குமென்றும், இவ்விரு வகைப் பண்பும் பொருட்கு உரிமை பூண்டு நிற்றலின் அப் பண்பை யுணர்த்துஞ்சொல் உரிச்சொல்லெனப்பட்டதென்றும், நடவா முதலிய முதனிலைகளும் தொழிற் பண்பை யுணர்த்துஞ்