பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எச்சவியல் $} செய்யுள் செய்யும் வழிப்படும் விகாரமும் செய்யுட் பொருள் கோளும் ஆகியவற்றையுணர்த்துகின்ருர் 16-முதல் 25-வரை யுள்ள சூத்திரங்களால் வேற்றுமைத்தொகை, உவமத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உம்மைத்தொகை, அன் மொழித்தொகை ஆகிய அறுவகைத் தொகைச்சொற்களின் இயல்பினை விரித்துரைக்கின்ருர் 26-முதல் 30-வரை சொல் மரபுபற்றிய வழுக்காக்கின்ருர். 31-முதல் 33-வரை முற்றுச் சொற்கு இலக்கணங்கூறுகின்ருர். 34-முதல் 45-வரை மேல் வினையியலுள்ளும் இடைச்சொல்லுள்ளும் முடிபு கூறப்படா தெஞ்சிநின்ற பிரிநிலையெச்சம், வினையெச்சம், பெயரெச்சம், ஒழியிசையெச்சம், எதிர்மறையெச்சம், உம்மையெச்சம், என வென்னெச்சம், சொல்லெச்சம், குறிப்பெச்சம், இசையெச்சம் ஆகிய பத்துவகை யெச்சங்களுக்கும் முடிபு கூறுகின்ருர். 45முதல் 65-வரையுள்ள சூத்திரங்களால் ஒருசார் மரபுவழுக்காத் தலும், கிளவியாக்கத்துக் கூறப்படாதெஞ்சிநின்ற மரபிலக்கண மும், ஒருசார் வழுக்காத்தலும், வினையியலுள்ளும் இடையியலுள் ளும் சொல்லாது ஒழிந்துநின்ற ஒழியும், புதியன புகுதலும், தலக் குறை, இடைக்குறை; கடைக்குறையாகிய விகாரமும், வேறுபடுத் தலும் வேறு பகுக்கப்படுதலுமாகிய சொல்வகையுள் இடைச் சொல்லெல்லாம் பொருளே வேறுபடுத்தும் சொல்லாதலும், உரிச்சொல்லுள்ளும் சில அவ்வாறு பொருள் வேறுபடுத்துஞ் சொல்லாதலும், வினையெச்சத்திரிபும், பொருளால் மாறுபட்ட இருசொற்கள் ஒருங்கு வருதலும் குறிப்பாற் பொருளுணரப் படுவனவும், ஒரு பொருள்மேல் வரும் இரண்டு சொற்கள் பிரிவின் நிற்றலும், ஒருமைக்குரிய பெயர்ச்சொல் பன்மை யுணர்த்தலும். ஆற்றுப்படைச் செய்யுளில் முன்னிலை குறித்து நின்ற ஒருமைச்சொல் பன்மையொடு முடிதலும் உணர்த்தப் படுகின்றன. இவ்வியலிறுதியிலுள்ள 66-ஆம் சூத்திரம் இச் சொல்லதிகாரத்திற்குப் புறனடையாக அமைந்துளது.