பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 தொல்காப்பியம் நிகழ்ந்தது. அதன்கண் அகத்தியனர், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள், குன்றெறிந்த முருகவேள், முரஞ்சியூர் முடிநாகனர் நிதியின் கிழவன் முதலாக ஐஞ்நூற்று நாற்பத்தொன்பதின்மர் இருந்தனர். அவருள்ளிட்டு நாலாயிரத்து நானுற்று நாற்பத் தொன்பதின்மர் பாடினர். அவர்களாற் பாடப்பட்டன எத் துணையோ பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியா விரையும் முதலாயின. இத் தலைச்சங்கம் 4440-ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்றது. இச்சங்கத்தினைத் தோற்று வித்துப் புரந்தவர்கள் காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் ஈருகப் பாண்டியர் எண்பத்தொன்பதின்மராவர். அவருட் கவியரங்கேறிஞர் எழுவர் பாண்டியர். அக்காலத்துப் புலவர் எல்லோரும் தமக்கு வரம்பாகக்கொண்ட தமிழிலக்கண நூல் அகத்தியம் என்பதாகும். இரண்டாவது சங்கம் கபாடபுரத்துத் தோற்றுவிக்கப் பெற்றது. இதனை நிறுவிப் புரந்த பாண்டியர்கள் வெண்டேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈருக ஐம்பத்தொன்பதின் மராவர். அவருட் கவியரங்கேறிஞர் ஐவர். இதன்கண் இருந்து தமிழாராய்ந்தோர் அகத்தியளுர், தொல்காப்பியனர், இருந்தை யூர்க் கருங்கோழி, மோசி, வெள்ளுர்க்காப்பியன், சிறுபாண்ட சங்கன், திரையன் மாறன், துவரைக்கோன், கீரந்தை முதலிய ஐம்பத்தொன்பதின்மர். அவருள்ளிட்டு மூவாயிரத்தெழுநூற்றுவர் பாடினர். அவர்களாற் பாடப்பட்டன. கலியும் குருகும் வெண் டாளியும் வியாழமாலே யகவலும் முதலாயின. அவர்களால் தமிழி லக்கண நூல்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. அகத்தியமுந் தொல்காப்பியமும் மாபுரணமும் இசைநுணுக்கமும் பூதபுராணமும் என இவை இச்சங்கம் 3700-ஆண்டுகள் நடைபெற்றது. இச் சங்கத்திறுதியிற் கடல்கோள் ஒன்று நிகழ்ந்தது. கடல்கோளுக்குப்பின் உத்தரமதுரையாகிய கூடலிலே மூன்ருவது சங்கம் தொடங்கப் பெற்றது. இதனைத் தோற்று