பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எச்சவியல் 73 படுமென்ருர் தொல்காப்பியர்ை. பிற்காலத்தார் கூறும் யாற்று நீர்ப் பொருள்கோளும். அளேமறிபாப்புப் பொருள் கோளும் திரிவின்றிப் பொருள் விளக்குதலின் இயல்பாயடங்கும். கொண்டு கூட்டு சுண்ணமொழிமாற்றிலும், பூட்டுவிற் பொருள்கோள் மொழிமாற்றிலும் அடங்குமென்றும், தாப்பிசைப் பொருள்கோளில் முன்னெருசொல் வருவிக்க வேண்டுதலின் அது பிரிநிலை வினையே’ என்னுஞ் சூத்திரத்துளடங்குமென்றுங் கூறுவர் தெய்வச் சிலையார். அறுவகைத் தொகை சொற்களின் இலக்கண முணர்த்துங் கால், வேற்றுமை யுருபும் உவமவுருபும் உம்மையும் வினைச்சொல் லீறும் பண்புச்சொல்லீறும் தொகுதலின் தொகையாயின வென்றும், அவ்வப் பொருள்மேல் ஒன்றும் பலவுமாகிய சொற்கள் பிளவுபடாது ஒற்றுமைப்படத் தம்முள் இயைதலின் தொகை யாயினவென்றும் உரையாசிரியர்கள் இருவகைப் பெயர்க்காரணங் கூறியுள்ளார்கள். 'ஐம்பாலறியும் பண்புதொகு மொழியும் எனவும் செய்யுஞ் செய்தவென்னுங் கிளவியின் மெய்யொருங்கியலுந் தொழில் தொகு மொழியும் எனவும் உருபுதொக வருதலும் எனவும் மெய்யுருபுதொகா விறுதியான எனவும் பண்புதொக வருஉங் கிளவியானும் எனவும் உம்மைதொக்க பெயர்வயினனும் எனவும் வேற்றுமை தொக்க பெயர் வயிருனும் எ ன வும் உம்மை யெஞ்சிய இருபெயர்த் தொகைமொழி எனவும் ஆசிரியர் தொக்கே நிற்குமெனச் சூத்திரஞ் செய்தலின், வேற்றுமை யுருபும், உவம வுருபும், உம்மும், வினைச்சொல்லீறும், பண்புணர்த் தும் ஈறும், இத்தொகைச் சொற்கள் அல்லாததோர் சொல்லும் தொக்கு நிற்றலின் தொகைச் சொல்லென்பதே அவர் கருத் தாயிற்று" என நச்சினர்க்கினியர் தொகைமொழிபற்றிய தொல் காப்பியனர் கருத்தை நன்கு விளக்கியுள்ளார்.