பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தொல்காப்பியம் நுதலியபொருள் முற்றுச் சொல்லாவது இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலத்தாலும், தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் முன்றிடத்தாலும், தொழிலாலும் குறிப்பாலும் இவ்விரண்டாய் வரும் அவ்வறுவகைச் சொல்லாம் என்பர் ஆசிரியர். மூவிடத்தும் தொழிலும் குறிப்புப்பற்றி இவ்விரண்டாய் வருதலின் அறுவகைச் சொல்லாயின. செய்கையும், பாலும், காலமும், செயப்படு பொருளும் தோன்றி முற்றி நிற்றலானும், பிறிதோர் சொல் நோக்காது முடிந்து நிற்றலானும், எப்பொழுது அவை தம் எச்சம் பெற்று நின்றனவோ அப்பொழுதே பின் யாதும் நோக் காவாய்ச் செப்பினை முடினுற்போன்று பொருள் முற்றி அமைந்து மாறுதலானும் முற்ருயின எனக் காரணங் கூறுவர் உரை யாசிரியர். பின் பிரிநிலை வினையே பெயரே (எச்-34) என்புழிப் பெயரெச்சமும் என்புழிப் பெயரெச்சமும் வினையெச்சமுங் கூறுத லின் அவற்ருேடியைய முற்றுச் சொல்லிலக்கணமும் ஈண்டுக் கூறினர். கூறவே முற்றும் பெயரெச்சமும் வினையெச்சமும் என வினைச்சொல் மூவகைத் தாதல் இனிதுணரப்படும். எஞ்சி நிற்பதோர் பொருளையுடைய சொல் எச்சச் சொல் லாகும். பிரிக்கப்பட்ட பொருளையுணர்த்துஞ் சொல் எஞ்ச நிற்பது பிரிநிலையெச்சம். வினைச்சொல் எஞ்ச நிற்பது வினையெச்சம். பெயர்ச்சொல் எஞ்ச நிற்பது பெயரெச்சம். சொல்லொழிந்த சொற்பொருண்மை யெஞ்ச நிற்பது ஒழியிசையெச்சம். தன்னின் மாறுபட்ட பொருண்மை யெஞ்ச நிற்பது எதிர்மறையெச்சம். உம்மையுடைத்தாயும் உம்மையின்றியும் வருஞ்சொற்ருெடர்ப் பொருளை எச்சமாகக் கொண்டு முடிய நிற்பது உம்மையெச்ச மாகும். எனவென்னும் ஈற்றையுடையதாய் வினையெஞ்ச நிற்பது எனவென்னெச்சமாகும். இவையேழும் தமக்குமேல் வந்து முடிக் கும் எச்சச் சொற்களையுடையனவாகும். சொல்லெச்சம், குறிப் பெச்சம், இசையெச்சம் என்னும் மூன்றும் ஒருதொடர்க்கு ஒழிபாய் எஞ்சிநிற்பன. எனவே இவை பிற சொற்களை விரும்பி நில்லாது