பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் 77 தலும் பொருளிட்டலும் இன்பம் நுகர்தலுமாகிய ஒழுகலாறுகள் உரிப் பொருள்களாம். இவை மக்களுக்கே யுரிய பொருள்களா தலின் உரிப்பொருளெனப்பட்டன. கணவனும் மனைவியும் அன் பிற்ை கலந்து வாழுங் குடும்ப வாழ்வினை அகமென்றும், இவ் வாறு பல்லாயிரங் குடும்பங்கள் இகலின்றி ஒத்து வாழ்வதற்கு அரணுகிய அரசியல் வாழ்வினைப் புறமென்றும் கூறுதல் தமிழ் மரபாகும். அகமாவது ஒருவனும் ஒருத்தியும் அன்பினுற் கூடி நுகரும் போக நுகர்ச்சியாகலான் அதனுலாய பயன் அதனைத் துய்த்த அவ்விருவர் உள்ளத்திற்கே புலனுதலின் அதனை அகம் என்ருர். புறப் பொருளாவது மறஞ்செய்தலும் அறஞ்செய்தலு மாதலால் அவற்ருலாய பயன் பிறர்க்குப் புலளுதலின் புறமென் ருர். இவ்வாறு உலகத்துப் பொருளெல்லாவற்றையும் முதல், கரு, உரி யென முன்ருகப் பகுத்து அவற்றை அகம், புறமென இருவகையாக வகுத்து விளக்குதல் பண்டைத் தமிழர் கண் டுணர்ந்த பொருள்நூற் றுணிபாதலின் முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிய ஆசிரியர் தொல்காப்பியனரும் முன்னைத் தமிழாசிரியர் கூறிய முறையே பொருளிலக்கண வரம்பினை இவ்வதிகாரத்து விரித்துணர்த்துகின்ருர், அறம், பொருள், இன்பம், வீடு என உலகத்தோரும் சமயத் தோருங் கூறுகின்ற பொருள்கள் யாவும் முதல், கரு, உரி யென்னும் இம்மூன்றனுள் உரிப்பொருளாய் அடங்குமென்றும், தொல்காப்பியமாகிய இந்நூலகத்துக் காமப்பகுதியும், வீரப் பகுதியும் விரித்துக் கூறப்பட்டன, ஏனைய தொகுத்துரைக்கப் பட்டன வென்றும், இன்பங் காரணமாகப் பொருள் தேடுவராத லானும் பொருளாலே அறஞ் செய்வராகலானும் இந்நூலாசிரியர் (தொல்காப்பியனர்) இன்பமும் பொருளும் அறமுமென ஒதின ரென்றும் இளம்பூரணர் கூறுகின்ருர்.