பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3G தொல்காப்பியம் துதலியபொருள் வியல், கற்பியல், பொருளியல் முதலாகப் பின்வரும் இயல்களில் விரித்துரைக்கப்படும். கைக்கிளை முதலாகப் பெருந்திணை யிறுதியாகச் சொல்லப் படும் அகத்திணை யேழனுள் நடுவே வைத்து எண்ணப்பட்ட முல்லை, குறிஞ்சி, பாலே, மருதம், நெய்தலென்னும் ஐந்தையும் ஐந்திணையென ஒன்ருக அடக்கி, கைக்கிளை, பெருந்திணை, ஐந் திணையென மூவகையாகப் பகுத்து விளக்குவர் ஆசிரியர். ஒருவன் ஒருத்தியென்னும் இருவருள் ஒருவர் மட்டும் அன்பினுற் கூடி வாழ்தலில் அளவிறந்த வேட்கையுடையராயொழுக, மற்ற வர் அவரது அன்பின் திறத்தை யுணர்ந்து கொள்ள முடியாத நிலை ஒருபக்கத்து உறவு. ஆதலின் கைக்கிளையெனப்படும். கைபக்கம். கிளே-உறவு. கைக்கிளையென்பது ஒருதலைக் காமம். ஒருவன் ஒருத்தியாகிய இருவருள் ஒருவர்க்கொருவர் அன்பின்றிக் கூடி வாழும் நிலை பெருந்திணையெனப்படும். இத்தகைய உளம் பொருந்தா வாழ்க்கை உலகியலிற் பெரும்பான்மையாகக் காணப்படுதலால் இதற்குப் பெருந்திணையெனப் பெயரிட்டனர் முன்னையோர். பெருந்திணை - உலகிற் பெரும்பான்மையாக நிகழும் ஒழுகலாறு. பல பிறவிகள் தோறும் கணவனும் மனைவி யுமாக ஒன்றி வாழ்ந்தமையால் நிரம்பிய அன்புடையாரிருவர் வேறுவேறிடங்களிற் பிறந்து வளர்ந்தராயினும் நல்லூழின் செய லால் ஓரிடத்தெதிர்ப் பட்டு நெஞ்சு கலந்து அன்பினல் அள வளாவுதலும், அவ்விருவருள் கணவன் உலகியற் கடமை கருதிச் சிலநாள் மனைவியைப் பிரிந்து சேறலும், மனைவி அப்பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து ஆற்றியிருத்தலும் பிரிந்த கணவன் குறித்த நாளில் வரத் தாமதிப்பின் அவள் ஆற்றமை மிக்கு இரங்குதலும், பின் அவன் வந்தபோது அன்பினுற் பிணங்குதலும் என ஐந்து பகுதியாக ஒத்த அன்புடையா ரிருவரது ஒழுகலாறு விரித்து விளக்கப் பெறுதலின் அஃது ஐந்திணையெனப் பெயர் பெறுவதாயிற்று.