பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தொல்காப்பியம் நுதலியபொருள் ஒரு தொழிலைச் செய்து முடிக்கவல்லவர் வினவலர். தாமாக ஒன்றைச் செய்யாது பிறர் இத்தொழிலை இவ்வாறு செய்க என ஏவினுல் அவர் ஏவியவண்ணம் செய்யுமியல்புடையோர் ஏவல் மரபின் ஏனேர். இவரனைவரும் பிறர்க்கு அடங்கி அவர் சொல்வழி யொழுகு மியல்பினராதலின், அறம்பொருளின் பங்களில் வழுவா தொழுகும் அகனந்தினையொழுகலாற்றிற்கு உரியரல்லரென்றும் அவற்றின் புறத்தவாகிய கைக்கிளை பெருந்திணைக்கேயுரிய ரென்றும் கூறுவர் தொல்காப்பியர் (அகத்-25, 26). ஓதல், பகை, தூது என்பன பிரிவுக்குரிய நிமித்தங்களாம். ஒதற்குப் பிரியும் பிரிவும் துதாகிப் பிரியும் பிரிவும் ஒழுக்கத் தாலும் பண்பிலுைம் உணர்வு மிகுதியாலும் ஏனையோரினும் உயர்வுடையார்க்கே யுரியனவாம். பகைவரை வெல்லுதற் பொருட்டு வேந்தன் தானே படையொடு செல்லுதலும் அவ ைெடு பொருந்திய ஏனைக் குறுநிலத் தலைவர் படையொடு செல்லுதலும் வேந் தனது ஆணைவழி நிகழ்தற்குரியனவேயாம். வேந்தனுற் சிறப்பளித்துப் பாராட்டப்பெற்ற ஏனையோர், முல்லை முதலாகச் சொல்லிய நிலப்பகுதிகளுள் அலைத்தல் பெற்றுச் சிதைவுற்றதனைச் சிதைவு நீக்கிக் காத்தல் வேண்டியும், அரசிறையாக இயற்றப்பெற்ற பொருளை ஈட்டுதல் கருதியும் பிரிந்து செல்வர். மலர்தலையுலகிற்கு உயிரெனச் சிறத்தலின் எல்லா மக்களினும் மேலோராகிய வேந்தர்க்குரிய முறை செய்தற்றன்மை நானிலத் தலைவர்க்கும் ஒப்பவுரியதாகும். மன்னர்க்குரிய ஆட்சியுரிமையில் அவரது குடியிற் பிறந்த பின்னேர்கள் இயல்பாக உரிமையுடையராவர்; அவ்வுரிமை உயர்ந் தோர்க்குரியதாக நூலிற் சொல்லப்பட்ட முறைமையான் வந் தெய்தும். முடிவேந்தர்க்கு இயல்பாகவுரிய ஆட்சியுரிமை, அவர் குடியிற் பிறந்தோர்க்கேயன்றி, வேந்தர்குடியின் வேறுபட்ட ஏனையோர் பாலும் எய்துமிடமுடைத்து. வேந்து வினையியற்கை யெய்திய ஏைேர்க்குப் பொருள்வயிற் பிரிவும் உரியதாகும்.