பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணையியல் 87 அங்ங்ணம் அவர் சென்று ஈட்டும் பொருள் உயர்ந்தோரால் மதிக்கப்படும் சிறப்புடைய ஒழுக்கத்தோடு பொருந்தியதாதல் வேண்டும். அன்பினைந்திணையே யன்றிக் கைக்கிளை பெருந்திணை யாகிய எத்திணைக் கண்ணும் பெண்ணுெருத்தி நாணிறந்து மட லேறினுள் என்றல் பொலிவுமிக்க வாழ்க்கை நெறியன்று; ஆத லால் தலைவன் தலைமகளையுடன்கொண்டு கடல்கடந்து செல்லும் வழக்கம் இல்லை. என 27-முதல் 38-வரையுள்ள சூத்திரங்களால் அகவொழுக்கங்களிற் பெருவரவிற்ருய பாலைத்திணைக்குரிய நோக்கமும் செயல்முறைகளும் அவற்றுக்கு உரிமையுடையோர் இன்னின்னரென்பதும் உணர்த்துவர் ஆசிரியர். தலைமகள் தலைவனுடன் போகியவழி நற்ருய் கூறுவனவும், செவிலிக்குரிய திறமும், தலைமகளைத் தலைவனுடன் அனுப்புங்கால் தோழி கூறுவனவும், உடன்போக்கிற் கண்டோர்க்குக் கூற்று நிகழுமிடங்களும், பிரிவின்கண் தலைமகற்குக் கூற்றுநிகழுமிடங்க ளும், ஏனையோர் கூற்றிற்கு உரியராதலும் 39-முதல் 45-வரை யுள்ள சூத்திரங்களால் உணர்த்தப்பட்டன. முன்னர் நிகழ்ந்த தோர் நிகழ்ச்சி பின்னர் நினைத்தற்குரிய நிமித்தமாதலும், முன்பு நிகழ்ந்ததொன்றினைக்கூறி நிற்றல் ஒருதிணையாயடங்குதலும், அகத்திணை மரபு மாறுபடாதனவாய்க் கலத் தற்குரிய பொருள் நிகழ்ச்சிகள் கலத்தலுண்டென்பதும் முறையே 46, 47, 48-ஆம் சூத்திரங்களிற் சொல்லப்பட்டன. அகப்பொருளொழுகளாற்றில் சொல்லால் வெளியிட்டுக் கூறுதற்குரியவல்லாத எண்ணங்களை நாகரிகமாக மறைத்துக் கூறுதற்பொருட்டு அமைத்துக்கொண்ட உரையாடல் முறையே உள்ளுறையுவமமாகும். பொருள் புலப்பாட்டிற்கு இன்றியமை யாத ஏனையுவமம் போன்று அகப்பொருளை யுணர்த்தும் நிலையில் தள்ளாது கருதுதற்குரியது இவ்வுள்ளுறையுவமமாகும். தெய்வ மல்லாத ஏனைக் கருப்பொருள்களின் நிகழ்ச்சியினை வெளியிட் டுரைக்கு முகத்தால் அந்நிகழ்ச்சியினை யுவமையாகக்கொண்டு