பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 தொல்காப்பியம் நுதலியபொருள் உலகியலில் நிகழும் உண்மை நிகழ்ச்சியே யென்பது நாடகம் என்னது நாடகவழக்கு என்றதனுற் புலனும். செய்யுள் செய்யும் புலவன் உலகில் வழங்கும் உண்மை நிகழ்ச்சியையே தான்கூறக் கருதினனெனினும், அதனை இனிது விளக்குதற்குரிய இடமுங் காலமுந் தந்து புனைந்துரைத்தால்தான் அப்பொருள் கேட் போருணர்வில் நன்கு பதியும். இவ்வுண்மை கருதியே நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலநெறி வழக்கம் எனத் தொல்காப்பியஞர் இச்செய்யுள் வழக்கிற்கு இலக்கணங் கூறுவாராயினர். சொல்லாலும் செயலாலும் விளங் கித் தோன்றுதற்குரிய புறப் பொருட்பாடலைக் காட்டிலும் மனத் தாலுணரத்தக்க அகப்பொருட் பாடலுக்கே இப்புனைந்துரை மரபு பெரிதும் இன்றியமையாததாகும். ஒருவரையொருவர் காணும் முதற் காட்சியிலேயே தொன்மை யன்பின் தொடர்புணர்ந்து கணவனும் மனைவியுமாக இன்றியமை யாதொழுகும் இயல்புடையார் உலகத்து மிகவும் அரியர். ஆகலின் உலகில் அருகித் தோன்றும் சிறப்புடைய அவர்களே நல்வாழ்விற் சிறந்த தலைமக்கள் எனப் பண்டைத் தமிழியல் நூலார் பாராட்டிப் போற்றினர். அத் தலைமக்கள் வாழ்வில் மிக்குத்தோன்றும் பேரன்பின் செயலை வெளிப்படுத்துணர்த்து முகத்தால் ஏனைப் பொதுமக்கள் வாழ்க்கையினையும் அன்பு நெறியிற் பயிற்றுதல் கூடுமெனக் கருதினர். மேற்காட்டிய தலைமக்கள் வாழ்க்கையினைப் பொருளாகக் கொண்டு செய்யுள் செய்வாராயினர். தலைமக்க ாேதற்குரிய முழுப் பெற்றியும் அமைந்தார் சிலரைக் கண்ட பின்னரே இத்தகைய செய்யுளைப் பாடுதல் வேண்டுமென்னும் வரையறையில்லை. அவ்வியல்புடையார் தம் காலத்திற் காணப் படாது போயினும் பொதுமக்கள் வாழ்க்கையில் தலைமக்களுக் குரிய இயல்புகளாக ஒவ்வொருவர்.பால் தனித்தனியமைந்து விளங்குந் தலைமைப் பண்புகளெல்லாம் தம்மாற் கூறப்படுத் தலைமக்களிடத்து உள்ளனவாக ஒருங்கு தொகுத்து இவ்வியல்