பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 தொல்காப்பியம் நுதலியபொருள் தாமேயன்றி எல்லாராலும் உய்த்துணரப்படுவதும் இஃது இவ் வாறிருந்ததெனப் பிறர்க்குக் கூறப்படுவதுமாகிய ஒழுகலாரும். அறமும் பொருளும் பற்றிப் புறத்தே நிகழும் ஒழுக்கத்தைப் புற மென்றது ஆகுபெயர். அன்பினுல் நிகழும் அகத்திணை யொழுக லாற்றை எழுதிணையாகப் பகுத்தாற் போன்று, அன்பின் வழிப் பட்டனவாய் அறமும் மறமும் பற்றிப் புறத்தே நிகழுஞ் செயல் முறைகளையும் எழுதிணையாகப் பகுத்துரைத்த்ல் பண்டைத் தமிழர் கண்டுணர்த்திய பொருளிலக்கண மரபாகும். வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்னும் இவ்வேழும் புறத்திணைகளாம். இவை முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலே, பெருந்திணை, கைக்கிளை என வரும் அகத்திணை யேழிற்கும் புறமாவன. அகத்திணை யொழுகலாறுகள் தத்தம் நிலத்திற்குச் சிறப்புரிமையுடைய குறிஞ்சி முல்லை முதலிய பூக்க ளாற் பெயர் பெற்ருற் போன்று, அவற்றின் புறத்தவாகிய புறத் திணையொழுகலாறுகளும் அவற்றை மேற்கொள்வோர் அடை யாளமாகச் சூடுதற்குரிய வெட்சி, வஞ்சி முதலிய பூக்களாற் பெயர்பெறுவனவாயின, அகத்திணைகளின் இயல் புணர்ந்தார்க் கன்றி அவற்றின் புறத்தவாகிய புறத்திணைகளும் அவற்றின் துறை வகைகளும் இனிது விளங்காவாதலின் அகத்திணைகளின் பொது விலக்கண முணர்த்திய பின்னர்ப் புறத்திணை யிலக்கணம் உணர்த்து கின்ருர். அதனுல் இஃது அகத்திணை யியலின் பின் வைக்கப் பட்டது. இவ்வியலிலுள்ள சூத்திரங்களை முப்பதாக இளம்பூரண ரும் முப்பத்தாருக நச்சினர்க்கினியரும் பகுத்து உரை கூறியுள் 6IrfᎢ fröᏮf . பகைவரது நாட்டின்மேற் படையொடு சென்று போர் செய்யக் கருதிய வேந்தன், அந்நாட்டில் வாழும் அறவோராகிய அந்தணர், மகளிர், பிணியாளர் முதலிய தீங்கு செய்யத் தகாத மக்களைப் போரால் விளையுந் துன்பங்களினின்றும் விலக்கி உய் வித்தல் வேண்டி, "யாம் போர் கருதி நுமது நாட்டிற் புகுகின்