பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தொல்காப்பியம் களப் புலவரையெல்லாம் அழைத்து, பெரியீர், இவ் வற்கட நாளில் உங்களைப் போற்றிக் காக்கும் ஆற்றலற்றவனுயினேன். என் நாட்டு மக்கள் பஞ்சத்தால் பெரிதும் வருந்துகின்றனர். நீங்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்று மழைபெய்து நாடு செழித்தபின் வம்மின்' என்று கூறினன். புலவர்களும் தாம்தாம் விரும்பிய ஊர்களிற் சென்று தங்கினர்கள் பன்னிரண்டு ஆண்டு கள் கழிந்த பின்னர் நாடு மலிய மழை பெய்தது. தனது நாடு மழையால் வளம்பெற்றமை யறிந்து மகிழ்ந்த பாண்டியன், மீண்டும் தமிழ் வளர்ச்சியிற் கருத்துடையணுகிப் புலவரையெல் லாம் அழைத்து வருக என எல்லாப் பக்கமும் ஆட்போக்கினன். பாண்டியனுடைய ஏவலாளர் தமிழ்நாடெங்கும் புலவர்களைத் தேடித் திரிந்து, எழுத்ததிகாரத்திலும் சொல்லதிகாரத்திலும் நிரம்பிய பயிற்சி யுடையாரைமட்டுங் கண்டு அழைத்துவந்து பொருளதிகாரம் வல்லாரைத் தாம் காணப்பெருமையை அரச லுக்குத் தெரிவித்தனர். அதுகேட்ட பாண்டியன், "எழுத்ததிகார மும் சொல்லதிகா மும் ஆராய்வது பொருளதிகாரத்தை யுணர்ந்து பயன் பெறுவதற்கன்றே அத்தகைய பொருளதிகாரம் பெறேமே யெனின் இவை பெற்றும் பெற்றிலேம்" எனக் கவல்வாயிைனன். அவனது கவற்சியை நீக்குதற்பொருட்டு ஆலவாயிற் பெருமா னடிகளாகிய இறைவன், தள்ளாப் பொருளியல்பாகிய அகனை ந் திணையை விளக்கும் அறுபது சூத்திரங்களே இயற்றி, அவற்றை முன்று செப்பேடுகளில் எழுதிப் பிடத்தின்கீழ் வைத்தருளின்ை. அவ்வேடுகள் திருவாலவாய்த் திருக்கோயிலில் இறைவற்கு வழிபாடு செய்யும் குருக்கள் கையில் அகப்பட்டன. ஏடுகளைப் படித்துப் பார்த்த அளவில் அவற்றில் எழுதப்பட்ட நூல் வாய்ப் புடைத் தாயதோர் பொருளதிகாரமாய்த் தோன்றியது. அதனை யுணர்ந்த கோயிற் பூசகளுகிய பார்ப்பான், பொருளதிகாரம் பெருது கவலும் மன்னனை யடைந்து அந்நூலைக் காட்டினன். மன்னனும் அந்நூலைப் பெற்று மகிழ்ந்து அந்நூலுக்குப் புலவர் களைக் கொண்டு உரைகாண முயன்ருன். மதுரை ஆலவாயிற்