பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்தினேயியல் 33 ருேம், நீவிர் நுமக்குப் பாதுகாவலான இடங்களை நாடிச் செல்லு மின்" என இவ்வாறு அவர்களுக்கு அறிவித்தலும், அவ்வறிவிப் பினை யுணர்ந்து வெளிச் செல்லும் பகுத்துணர்வில்லாத பசுக்கூட்டங்களை ஒருவரும் அறியாதபடி நள்ளிரவில் தன் படை வீரர்களேயனுப்பிக் களவிற் கவர்ந்து வரச்செய்து பாதுகாத்தலும் அறநெறி வழாது மேற்கொள்ளுதற்குரிய பண்டைத் தமிழர் போர்முறையாகும். அம்முறைப்படி வேந்தல்ை அனுப்பப்பட்ட படை மறவர்கள், பகைவர் நாட்டிற் புகுந்து அங்குள்ள ஆனிரை களைக் களவிற் கவர்ந்து வந்து பாதுகாக்குஞ் செயல் வெட்சி யென்னும் புறத்திணையாகும். ஆனிரைகளைக் கவர்தலை மேற் கொண்ட வீரர் தமது போர் முறையைப் பகை வேந்தர்க்கு அறிவிக்கும் அடையாளமாக வெட்சிப்பூவைச் சூடிச்செல்லுதல் மரபு. அதனுல் இச்செயல் வெட்சியெனப் பெயர் பெறுவ தாயிற்று. வெட்சித்திணை குறிஞ்சியென்னும் அகத்திணைக்குப் புறணுகும். "வெட்சி குறிஞ்சிக்குப் புறஞயது எவ்வாறெனின், நிரைகோடல் குறிஞ்சிக்குரிய மலைநிலத்தின்கண் நிகழ்தலானும், அந்நிலத்தில் மக்களாயின் பிறநாட்டு ஆனிரையைக் களவிற்கோடல் ஒருபுடை குறிஞ்சிக்குரித்தாகிய களவோடு ஒத்தலானும் அதற்கு அது புறயிைற்றென்க, சூடும் பூவும் அந்நிலத்திற்குரிய பூவாதலானும் அதற்கு அது புறமாம்” என இளம்பூரணரும், களவொழுக்கமும் கங்குற்காலமும் காவலர் கடுகினுந் தாம் செய்யக் கருதிய பொருளை இரவின்கண் முடித்து மீடலும் போல்வன ஒத்தலின் வெட்சி குறிஞ்சிக்குப் புறனென்ருர்” என நச்சினர்க்கினியரும் வெட்சி குறிஞ்சிக்குப் புறளுதற்குரிய இயைபினை விளக்கினர். நிரை கவர்தலாகிய வெட்சியொழுக்கம் வேந்தனது ஆணை வழியே நிகழ்தற்குரியதென்பதும், அரசனது, ஆணையின்றி அவனுடைய படைவீரர் முதலியோர் தனித்துச் செய்தற்குரிய