பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்தினேயியல் 95 மறத்தொழிலே முடிக்கவல்ல வீரக்குடியிற் பிறந்தாரது நிலைமையைக் கூறுதலும், அவர்களது தறுகண்மையினை வளர்க் குந் தெய்வமாகிய வெற்றி வேற்றடக்கைக் கொற்றவையின் அருள் நிலையைக் கூறுதலும் ஆகிய இவை மேற்கூறிய குறிஞ்சித் திணையின் புறளுகிய வெட்சித் திணையின் பாற்படும். தெய்வத்திற்குச் செய்யும் வெறியென்னும் வழிபாட்டினை யறிந்த வேலனென்பான் தன் வேந்தற்கு வெற்றி வேண்டித் தெய்வத்தைப் பரவிய காந்தளும், மாறுகொண்டு பொரும் போர்க் களத்திலே பகைவேந்தர் இன்னவேந்தன் படையாளர் இவர் எனத் தம்மை அடையாளந் தெரிந்து பொருதற்கு வாய்ப்பாகப் படைவீரர் சூடுதற்குரிய அடையாளப் பூவாகிய சேரரதுபனை, பாண்டியரது வேம்பு, சோழரது ஆத்தி யென்னும் உயர்ந்த புகழினையுடைய முவகைப் பூக்களும், தம் நாட்டின் வெற்றி வேண்டி மகளிர் முருகனைப் பரவியாடும் வள்ளிக்கூத்தும், புற முதுகிட்டு ஓடாமைக்குக் காரணமாக வீரர் அணியும் கழலின் சிறப்பும், பின்னிடாது போர் செய்யவல்ல சினமிக்க வேந்தனது வெற்றியை யுளத்தெண்ணி நன்மையுந் தீமையுங் காட்டுமியல் புடைய உன்னம் என்னும் மரத்தோடு நிமித்தங்கொள்ளுதலும், காயாம்பூ மலர்ச்சியைக் கண்டோர் பூவைப்பூ மேனியாளுகிய மாயோனைப்போன்று தம் நாட்டினைக் காக்கவல்ல மன்னனது பெருஞ் சிறப்பினைப் புகழ்ந்து போற்றுதலும், நிரைகவர்ந்த படை மறவரைப் போரிற் புறங்கொடுத்தோடச் செய்தலும், அவ ராற் கொள்ளப்பட்ட பசுக்களை மீட்டுத் தன்னுட்டிற் கொண்டு வந்து தருதலும், இவ்வாறு மீட்டுக் கொணர் தற்குரிய தறுகண் மையாலுளவாம் புகழமைந்த தம் வேந் தனது சிறப்பைப் படை மறவர் எடுத்துரைத்துப் பாராட்டுதலும், தன்பாலமைந்த தறு கண்மையிஞலே தன்னேடு சார்த்தி வஞ்சினங் கூறுதலும், நிரை 1. மதங்கடைக்கூட்டியே குடி நிலே’ என இளம்பூரணர் கொண்ட பாடமே பொருத்தமுடையது.