பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 தொல்காப்பியம் நுதலியபொருள் மீட்டலை மேற்கொள்வோர் போர்ப்பூவாக அணிதற்குரிய கரந்தை யின் சிறப்புரைதலும், எதிர்த்துவரும் படையின் முன்னணியைத் தாளுெருவனுமே தனித்து நின்று தடுத்தலும் பகைவரது வாளாற் பட்டு வீழ்தலும் ஆகப் பின்விளைவறியாது மேற்கொள்ளும் போர்ச் செயல்களாகிய இருவகைப்பட்ட பிள்ளை நிலையும், வாளாற் பொருது பகைவரைவென்று திரும்பிய இளைஞனே அந் நாட்டவர் கண்டு மகிழ்ந்து முரசு முழங்க அவனுக்கு நாட்டைப் பரிசிலாக வழங்கும் பிள்ளையாட்டும், போர்க்களத்து இறந்த வீரரைக் கல்லில் நிறுத்தி வழிபடுதற்பொருட்டு ; அதற்குரிய கல்லேக் காணுதலும், அக்கல்லினைக் கைக்கொள்ளுதலும், அங் ங்ணம் எடுத்த கல்லின நீர்ப்படுத்தித் தூய்மை செய்தலும், அதனை நடுதலும், அங்ங்ணம் நட்ட கல்லிற்குக் கோயிலெடுத்த லும், அக்கல்லைத் தெய்வமாக்கி வாழ்த்துதலும் என்று சொல்லப் பட்ட கற்கோள்நிலை ஆறும் ஆக இங்குச் சொல்லப்பட்ட இருபத் தொரு துறைகளும் போர்த் தொடக்கமாகிய வெட்சித்திணையுள் அடங்குவனவாம். தனது நாட்டிலுள்ள பசுக்களைப் பகைவேந்தன் படைமறவர் களவிற் கவர்ந்து சென்றதையறிந்த மன்னன், தன் படைவீரர்களை யனுப்பி அப்பசுக்களே மீட்டுவருதற்குரிய செயல் முறைகள் வெட்சித்திணையின் இடையே நிகழ்வனவாதலின், அவற்றை வேறுதின யாக்காமல் வெட்சித்திணைக்குரிய துறைகளாகவே கொண்டார் தொல்காப்பியர்ை. நிரை மீட்டலைக் கருதிய வீரர் கள் தமது செயலுக்கு அடையாளமாகக் கரந்தைப் பூவினச் சூடிச் செல்லும் வழக்கமுண்டென்பது அனேக்குரிமரபினது கரந்தை' எனவரும் தொல்காப்பியத் தொடராலும், "நாகுமுலை யன்ன நறும்பூங்கரந்தை, விரகறியாளர் மரபிற் சூட்ட, நிரை யிவட்டந்து"(புறநா-26) என வரும் புறப்பாட்டடிகளாலும் நன்கு விளங்கும்.