பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் 篮姆盘。 போற்றுதற்குரிய இருவகைப்பட்ட சிறப்பியல்பினையுடையது தும் பைத்திணையென இதன் சிறப்பினை விரித்துரைப்பர் ஆசிரியர். இத் தும்பைத்திணைக்குரியனவாகத் தானேநிலை முதலாக நூழில் ஈருகப் பன்னிரண்டு துறைகள் கூறப்பட்டுள்ளன. இத்துறைகள் யாவும் ஒரு களத்துப் பொருது நிற்கும் இருதிறத்துப் படையா ளர்க்கும் பொதுவாக அமைந்தவை. குற்றமற்ற கொள்கையில்ை தத்தமக்குரிய அறிவு, ஆண்மை, பெருமை முதலிய ஆற்றற் கூறுபாடுகளே ஏனையோரினும் வேறு பட மிகுத்து மேம்படுதல் வாகைத் திணையாகிய ஒழுகலாரும். வாகைத்திணை பாலை யென்னும் அகத்திணைக்குப் புறணுகும். பாலையாவது தனக்கென ஒரு நிலனுமின்றி எல்லா நிலத்தினும் காலம்பற்றிப் பிறப்பதுபோல, இதுவும் எல்லா நிலத்தினும் எல்லாக் குலத்தினுங் காலம்பற்றி நிகழ்வதாதலினலும், ஒத்தார் இருவர் புணர்ச்சியினின்றும் புகழ்ச்சி காரணமாகப் பிரியுமாறு போலத் தன்ளுேடு ஒத்தாரினின்றும் நீங்கிப் புகழ்ப்படுதலானும் பாலைக்கு வாகை புறஞயிற்று என்பர் இளம்பூரணர். அவரவர்க்குரிய துறையில் ஒப்புடைய பிறரோடு உறழ்ந்து மேம்படுதலும், தமக்குரிய துறையில் எதிர்ப்பின்றி இயல்பாக மேம்பட்டு விளங்குதலும் ஆகிய இரு திறமும் வாகைத்திணையே யாம். இவற்றுள் உறழ்ச்சி வகையாற்பெற்ற வென்றியை வாகை யெனவும் இயல்பாகப்பெற்ற வென்றியை முல்லையெனவும் வேறு படுத்து வழங்குதல் பிற்கால வழக்காகும். ஒதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அறுவகைத் தொழிலுடையோராகிய பார்ப்பார்க்குரிய பகுதியும், ஓதல், வேட்டல், ஈதல், படை வழங்குதல், குடியோம்பு தல் என்னும் ஐவகைத் தொழிலினராகிய அரசர் பகுதியும், ஓதல், வேட்டல், ஈதல், உழவு, வாணிகம், நிரையோம்பல் என்னும் அறுவகைத் தொழிலினராகிய ஏனை நிலமக்கள் பகுதியும், குற்ற