பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i02 தொல்காப்பியம் நுதலியபொருள் மற்ற ஒழுகலாற்றினை இறப்பு நிகழ்வு எதிர் வென்னும் மூவகைக் காலத்தினும் வழங்கும் நெறியாலமைத்த முழுதுணர்வுடைய அறிவர் பகுதியும், நீராடல், நிலத்திடைக் கிடத்தல், தோலுடுத் தல், சடைபுனைதல், எரியோம்பல், ஊரடையாமை, காட்டிலுள்ள உணவு கோடல், கடவுள் வழிபாடு, விருந்தோம்பல் என எட்டு வகைப்பட்ட தவஞ்செய்வார் கூறுபாடும், முன்னர்ப் பல கூறு பாடுகளாகப் பகுத்துரைத்த போர்த் துறைகளை யறிந்த பொருந ராகிய வீரர்க்குரிய கூறுபாடும், அத்தன்மைத்தாகிய நிலைமையை யுடைய பிறதொழில் வகையானுளவாகும் வென்றிவகையுடன் சேர்த்து வாகைத் திணையை எழுவகையாகப் பகுத்துரைப்பர் ஆசிரியர். இவ்வெழுவகையுள் இறுதியிற் கூறப்பட்ட அனநிலவகை யென்பது, முற்கூறிய ஆறுவகையினும் அடங்காத எவ்வகை வென்றியையும் உள்ளடக்கிய தொகுப்பாகும். ஈண்டு இரு மூன்று மரபின் ஏஞேர் எனக் குறிக்கப்பட்டோர் இச்சூத்திரத்து விதந் துரைக்கப்பட்ட பார்ப்பாரும் அரசரும் அறிவரும் தாபதரும் பொருநரும் அல்லாத என நிலமக்களாவர். இத்தொடரிற் குறிக் கப்பட்ட ஏனேராவார் வணிகரும் வேளாளரும் என இளம்பூரண ரும் நச்சினர்க்கினியரும் உரை கூறியுள்ளார்கள். நால்வகை வருணப் பிரிவு ஆரியர்களிடையிலன்றிப் பண்டைத் தமிழ் மக்க ளிடையே தோன்றியதில்லை. வண்புகழ் மூவர் தண்பொழிலிடையே வழங்குந் தமிழ் வழக்கே நுதலிய தொல்காப்பியச் சூத்திரங் களுக்குப் பிற்காலத்தாரால் மேற்கொள்ளப்பட்ட வடநூல் மரபினைத் தழுவிப் பொருள் கூறுதல் ஒரு சிறிதும் பொருந்தாது. உரையாசிரியர்கள் கருதுமாறு வணிகரையும் வேளாளரையும் ஏனேரென அடக்குதல் ஆசிரியர் கருத்தாயின், அவ்விரு திறத் தார்க்கும் இங்குச் சொல்லப்பட்ட அறுவகைத் தொழில்களும் ஒப்புவுரியவாதலின்றி அவ்விருவரிடையே அவ்வாருய் வேறு படுதற்கு இடமில்லை.