பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் 10? கடவுள் வாழ்த்து வகை, வாழ்த்தியல் வகை, மங்கல வகை, செவியறிவுறுத்தல், ஆற்றுப்படை வகை, பரிசிற்றுறை வகை கைக்கிளை வகை, வசை வகை எனவரும் எட்டும் பாடாண்டிணை வகையென இளம்பூரணரும், பாடாண்திணைக்கு ஒதுகின்ற பொருட்பகுதி பலவுங் கூட்டி ஒன்றும் நிரை கவர்தல் நிரை ட்டல் என்னும் வெட்சி வகை இரண்டும், பொதுவியல், வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி என்பனவும் ஆக இவ்வெட் டும் பாடாண்திணை வகையென நச்சினுர்க்கினியரும் வேறுவேறு வகுத்துக் காட்டியுள்ளார்கள். இனிப் புறத்திணை ஆறும் அன்பினைந்திணை கைக்கிளையாகிய அகத்திணை இரண்டும் ஆக இவ்வெட்டும் பாடிாண்டிணையின் வகையென்பாருமுளர். அமரர் என்னும் சொல் அமர் என்பதன் அடியாகப் பிறந்த பெயராய்ப் போர்செய்தலையே தமக்குரிய தொழிலாகக்கொண்டு வாழும் வீரரைக் குறித்து வழங்குந் தனித் தமிழ்ச் சொல்லாம். இச்சொல்லுக்குத் தேவர் எனப் பொருள்கொண்டு, அமரர்கண் முடியும் அறுவகையாவன: கொடிநிலை, கந்தழி, வள்ளி, புலவ ராற்றுப்படை புகழ்தல், பரவல் எனப் புறப்பொருள் வெண்பா மாலை நூலாசிரியராகிய ஐயளுரிதருைம் இளம்பூரணரும், பிறப்பு வகையானன்றிச் சிறப்பு வகையால் தேவர்கண்ணே வந்து முடிதலுடையவாகிய முனிவர், பார்ப்பார், ஆநிரை, மழை, முடி யுடைவேந்தர், உலகு என்னும் பொருள் பற்றிய அறுமுறை வாழ்த்தென நச்சிர்ைக்கினியரும், வானவர், அந்தணர், ஆணினம் மழை, அரசன், உலகம் என்னும் இவ்வாறு பொருளையும் வாழ்த்துதல் எனப் பிறரும் விளக்கங் கூறுவர். போர்மறவர்பாற் சென்றமைவனவாக முன் இவ்வியலில் விரித்து விளக்கிய வெட்சி முதல் காஞ்சியிருன புறத்திணை வகைபற்றிய ஆறுமே அமரர்கண் முடியும் அறுவகை யெனப்பட்டன என்பர் நாவலர் சோமசுந்தர பாரதியார். இக்கருத்தே ஆசிரியர் தொல்காப்பியனர் கூற்றுக்