பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 தொல்காப்பியம் நுதலியபொருள் கும் சங்கத் தொகை நூல்களாகிய தமிழ்ச் செய்யுட்களின் அமைப்புக்கும் ஏற்றதாகும். மக்களைப் பொருளாகக்கொண்டு பாடுதற்குரிய காமப் பகுதியினைக் கடவுளைப் பொருளாகக் கொண்டு பாடினும் நீக்காது ஏற்றுக்கொள்வர். கடவுளே ஏனைமக்கள் விரும்பியதாகச் செய்யுள் செய்தலும் நீக்கப்படாது. இவ்விரு வகையினையும் முறையே கடவுள்மாட்டுத் தெய்வப் பெண்டிர் நயந்தபக்கம் எனவும் கடவுள் மாட்டு மானிடப்பெண்டிர் நயந்தபக்கம் எனவும் வழங்குவர் இளம்பூரணர். இவற்றுடன் கடவுள் மானிடப் பெண்டிரை நயப் பனவும் அமைத்துக்கொள்வர் நச்சினர்க்கினியர். மக்கள் குழந் தைகளாக வளரும் பருவத்தும் அவர்களைக் காமுற்றதாகச் செய்யுள் செய்தலும் உண்டு. இப்பாடாண்திணையில் உலகியல் வழக்கத்தை யொட்டித் தலைமக்களுடைய ஊரும் உயர்குடிப் பிறப்பும் இயற்பெயரும் குறித்துப் பாராட்டப் பெறுதலுண்டு. வேந்தரது கொடியின் வெற்றியைப் பாராட்டிப் போற்றும் கொடிநிலையும், பகைவேந்தர்க்குப் பற்றுக்கோடாயுள்ள அரணை யழித்தலாகிய கந்தழியும், வேந்தற்கு, வெற்றிவேண்டி யாடும் வள்ளிக்கூத்தும் எனப் போர்த்துறையிலே முதலிற் சொல்லத் தக்க குற்றமற்ற சிறப்பினையுடைய இம்மூன்று செயல்களும் பாட்டுடைத் தலைமகனைச் சார்த்தி வருங்காலத்து முன்னர்க் குறித்த செந்துறை வண்ணப் பகுதியாகிய கடவுள் வாழ்த்தோடு பொருந்தி வருமென்பர் ஆசிரியர். கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும் எனத் தொல்காப் பியனர் கூறியது கொண்டு,அரி,அயன்,அரன் என்னும் முத்தேவர் கொடிகளுள் ஒன்ருேடு உவமித்து அரசன் கொடியைப் புகழ்வது. கொடிநிலை யெனவும், திருமால் சோவென்னும் அரணத்தையழித்த வெற்றியைச் சிறப்பித்தது கந்தழியெனவும், மகளிர் முருகனை வழிபட்டு வெறியாடுவது வள்ளியெனவும் துறை விளக்கங்கூறினர்