பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் * if: காத்தல் நொச்சி, பகைவருடைய மதிலைவளைத்தல் உழிஞை, பகைவரொடு பொருதல் தும்பை, பகைவரை வெல்லுதல் வாகை, ஒருவனுடைய புகழ், கொடை, தண்ணளி முதலிய வற்றைப் புகழ்ந்து பாடுதல் பாடாண், மேற்கூறிய புறத்திணைக் கெல்லாம் பொதுவாயுள்ள செயல் முறைகள் பொதுவியல், ஒருதலைக் காமம் கைக்கிளை, ஒவ்வாக்காமம் பெருந்திணை எனப் பன்னிரண்டு திணைகளாகப் பகுத்தும், இவற்றுள் முதலன ஏழும் புறம் எனவும் இறுதியிலுள்ள கைக்கிளை பெருந்திணை அகப்புற மெனவும் இடையிலுள்ள மூன்றும் புறப்புறமெனவும் வகைப் படுத்தியும், இலக்கணங் கூறியுள்ளார்கள். இப்பகுப்பு முறையினைத் தொல்காப்பியவுரையாசிரியர்களாகிய இளம்பூரணரும் நச்சிஞர்க் கினியரும் புறத்திணையியலுரைப் பகுதிகளில் ஆங்காங்கே மறுத் துள்ளார்கள். எனினும் இத்தகைய வேறுபாடுகளை முன்னேர் நூலின் முடிபு ஒருங்கு ஒத்தலும் திரிபு வேறுடைத்தாதலும் என இருவேறுவகைப்பட நிகழும் வழிநூல் சார்பு நூல்களில் மரபு நிலை திரியாது விரவும் பொருள்களாக அமைத்துக்கொள்ளுதலே முறையாகும். “அகம் புறம் எனப் பகுத்தவற்றைத் தம்முள் வேறுபாடு நோக்கி அகம் அகப்புறம் புறம் புறப்புறம் என நான்காகப் பகுத்தலும், வெட்சித்திணை, உழிஞைத்திணைகளின் மறுதலை வினையை வீற்று வினய்ாதலும் வேற்றுப்பூச் சூடுதலுமாகிய வேறுபாடுபற்றி வேறுதிணையாக வைத்தெண்ணுதலும் இன்னே ரன்னவை பிறவும் திரிபுடையவாயினும் மரபுநிலைதிரியாதன” எனவும் இவ்வுண்மையுணராதார் பன்னிருபடல முதலிய நூல்களை வழீஇ யினவென்றிகழ்ந்து..தமக்கு வேண்டியவாறே கூறுப” எனவும் வரும் சிவஞானமுனிவர் கூற்று இக்கருத்தினைப் புலப் படுத்துவதாகும். ஆசிரியர் தொல்காப்பியனுள் கைக்கிளை முதலாகப் பெருந் திணை யிறுதியாகவுள்ள ஏழுதிணைகளையும் அகமெனக் கொண்டா