பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தொல்காப்பியம் பட்ட அதிகாரங்கள் இடைச்சங்கத்தார்க்கும் கடைச்சங்கத்தார்க் கும் நூலாகிய தொல்காப்பியத்தைச் சார்ந்தன என்பதும் நன்கு துணியப்படும். பொருளதிகாரம் வல்லாரைத் தலைப்பட்டிலோம் என்புழிப் பொருளதிகாரம் வல்லார் எனக் குறிக்கப்பட்டவர், தொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்திரங்களை மனப்பாடமாக ஒதிப் பொருள் விரித்துரைக்க வல்ல ஆற்றலுடையோரேயாவர். பொருளதிகாரம் வல்லாரைத் தலைப்பட்டிலோம் எனவே பொரு ளதிகாரப் பகுதியும் கிடைக்கவில்லையென்பது நன்கு தெளியப் படும். தொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்திரப்பகுதி கிடைத் திருக்குமானல் அறுபது சூத்திரத்தாற் சுருங்கிய நூலாக இயற் றப்பெற்ற இறையனர் களவியலுக்கு உரை காணவேண்டிய இன்றியமையாமை நேர்ந்திராது. கடைச்சங்கத் திறுதிக்காலத் தில் பாண்டி நாட்டில் தொல்காப்பியப் பொருளதிகாரப் பகுதி திருத்தமாக வழங்கவில்லை யென்பது மேற்குறித்த இறையனரகப் பொருள் வரலாற்ருல் உய்த்துணரப்படும். இறையனாகப் பொரு ளின் தோற்ற வரலாறு புனைந்துரையாக எழுதப்பட்டிருத்தல் கூடும் என அறிஞர் சிலர் எண்ணுவர். எனினும் அந்நூலின் உரையாசிரியரால் தம் காலத்து வழங்கியனவாகக் குறிக்கப்பட்ட முச்சங்கங்களின் வரலாறு மெய்ம்மையுடையதே யெனக் கொள்ள வேண்டியுளது. இவ்வரலாற்றிற் காணப்படும் பெயர்கள், ஆண் டுக் கணக்கு முதலியவற்றிற் காலப் பழமையாற் சில புனைந் துரைகள் இடம் பெற்றிருத்தல் கூடும். அதுகொண்டு பண்டை நாளில் தமிழ்ச் சங்கங்களே நடைபெறவில்லை யெனக் கூறுவது பொருந்தாது. இறையனர் களவியல் இயற்றப்பெற்றதற்கு ஒட்டக்கூத்தர் கூறும் மற்ருெரு காரணம் இவண் ஆராய்வதற்குரியதொன்ரும். கூத்தர் தாம் பாடிய குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழிற் காப்புப் பருவத்தில்,