பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் #13 மேல் கைக்கிளைமுதற் பெருந்திணை இறுவாயாக எழு திணையோதி அவற்றின் புறத்து நிகழும் திணைகளும் ஒதிப்போ ந் தார். அவ்வெழுதிணையினும் ஒருதலைவேட்கையாகிய கைக்கிளேயும் ஒப்பில் கூட்டமாகிய பெருந்திணையும் ஒழித்து, இருவர் அன்பும் ஒத்த நிலைமையாகிய நடுவணைந்திணைக்கண்ணும் புணர்ப்பும், பிரி தலும்இருத்தலும், இரங்கலும், ஊடலுமாகிய உரிப்பொருள், களவு கற்பு என்னும் இருவகைக் கைகோளினும் நிகழுமாதலின் அவ்விரு வகைக் கைக்கோளினுங் களவாகிய கைகோள் இவ்வோத்தினுள் உணர்த்துதலான் அவற்றின்பின் கூறப்பட்டது' என முன்னுள்ள இயல்களோடு இவ்வியலுக்குள்ள தொடர்பினை விளக்கினர் இளம்பூரணர். 'இன்பத்திற்குப் பொதுவிலக்கணம் அகத்திணையியலுட் கூறி, அதற்கினமாகிய பொருளும் அறனும் கூறும் புறத்திணையை அதன் புறத்து நிகழ்தலிற் புறத்திணையியலுட்கூறி, ஈண்டு அவ்வின்பத்தினை விரித்துச் சிறப்பிலக்கணம் கூறுதலின், இஃது அகத்திணையியலோடு இயைபுடைத்தாயிற்று' என்ருர் நச்சினர்க் கினியர். இவ்வியற் சூத்திரங்களை 51-ஆக இளம்பூரணரும் 50ஆக நச்சினர்க்கினியரும் பகுத்து உரைகூறியுள்ளார்கள். அன்பினைந்திணையாகிய இக் களவொழுக்கத்தினைக் காம ய் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கொடுதழாஅல், தோழியிற் கூட்டம் என நால்வகையாகப் பகுத்துரைப்பர். அன்புடையார் இருவர் முற்பிறப்பின் நல்வினையால் எதிர்ப்பட்டு ஒருவரை யொருவர் இன்றியமையாதவராய் அன்பினுல் உளமொத்தலாகிய நெஞ்சக் கலப்பே காமப் புணர்ச்சியாகும். இருவரது உள்ளக் குறிப்பும் முயற்சியுமின்றி நல்வினைப் பயனகத் தன்னியல்பில் நிகழும் இவ்வுறவினை இயற்கைப்புணர்ச்சி, தெய்வப்புணர்ச்சி யென்ற பெயர்களால் வழங்குவர் முன்னையோர். இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிற்றைநாளும் அவ்விடத்திற்