பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் # 13 சுட்டி விலக்கியும் பொருத்தமுடைய நற்செயல்களே வெளிப்படை யாக எடுத்துரைத்து விளக்கியும் மக்களை நல்வழிப்படுத்துவதே சிறப்புடைய நூலின் மரபாகும். இம்மரபினை யுளத்துட்கொண்டு கைக்கின் பெருந்திணைகளைக் குறிப்பாகவும் அன்பினைந்திணையை விரிவாகவும் கூறுவர் ஆசிரியர். ஒருவனும் ஒருத்தியும் கூடி வாழும் மனையறத்தின் பயனுக அவ்விருரையும் பிறப்புத்தோறும் சேர்த்து வைப்பதும் பிரித்து விலக்குவதுமாகிய இருவகை ஊழினும், இருவருள்ளமும் எக் காலத்தும் ஒன்றி வாழ்தற்கேற்ற நல்லுழின் ஆணையால், ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முள் எதிர்ப்பட்டுக் காண்பர். அன்பு முதலியவற்ருல் தலைவன் மிக்கவணுயினுங் குற்றமில்லை. இச்செய்தி, “ஒன்றே வேறே யென்றிரு பால்வயின் ஒன்றி யுயர்ந்த பால தாணேயின் ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப மிக்கோ னுயினுங் கடிவரை யின்றே" என வரும் களவியற் சூத்திரத்தாலுணரப்படும். இங்ங்ணம் ஒரு வனும் ஒருத்தியும் எதிர்ப்படும் முதற் காட்சிக்கு நல் லுழின் ஆணையே காரணமென்பார் உயர்ந்த பால தாணை யின் என்றும், அவ்வூழின் ஆணைக்குக் காரணமாவது அவ்விரு வரும் பண்டைப் பிறப்புக்களிற் பயிலியது கெழீஇய நட்பென் பார் ஒன்றியுயர்ந்த பாலதாணை யென்றும், பல பிறவிகளிலும் பழகிய அன்பின் தொடர்ச்சியே ஒருவரையொருவர் இன்றியமை யாதவராகக்காணுதற்குரிய காதற் கிழமையை வழங்கியதென் பார், ஒத்தகிழவனுங் கிழத்தியுங்காண்ப வென்றும் கூறினர் தொல்காப்பியர்ை. தலைவனுக்கும் தலைவிக்கும் அமைந்த ஒத்த பண்புகளாவன: பிறப்பு, குடிமை, ஆண்மை, ஆண்டு, அழகு, அன்பு, நிறை, அருள், உணர்வு, திரு என்னும் இப்பத்துமாகும்.