பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் }}} வேட்கையுளதாகுங் கொல்லோ என ஐயுற்று நின்ற இருவரது அறிவினையும் ஒருப்படுத்தற்கு அவ்விருவர் கண்களும் வேட்கை யில்ை ஒருவர் ஒருவர்க்குரைக்குங் காமக்குறிப்புரையாம். கண்ட அளவிலேயே வேட்கைதோன்றி ஒருவரது உள்ளக் குறிப்பினை மற்றவர் ஏற்றுக்கொண்ட நிலையிலேதான் கண்ணினல் வரும் இக்குறிப்பு நிகழும். தன்னைத் தான் கொண்டொழுகும் பெருமையும், சென்ற விடங்களில் மனத்தைச் செல்லவிடாது தீமையின் நீக்கி நன்றின் பாலுய்க்கும் நல்லறிவும் ஆடவரது சிறப்பியல்பாகும். தனது நிறை காவலுக்கு இடையூறு நேருமோ வென்னும் அச்சமும், பெண்ணியல்பாகிய நாணமும், தான் மேற்கொண்ட கொள்கையை நெகிழவிடாமையாகிய மடனும் மகளிரது சிறப்பியல்பாகும். இவ்விரு திறத்தாரும் தம்மைக் காவாது வேட்கை மீதுர்ந்த நிலையிற்புன லோடும் வழிப் புற்சாய்ந்தாற்போலத் தமக்குரிய இக்குணங்களை நெகிழவிடுதல் கூடாமையின், தாம் எதிர்ப்பட்ட முதற்காட்சிலேயே மெய்யறு புணர்ச்சிக்கு உடன்படாது உள்ளப் புணர்ச்சி யளவே யொழுகி மணந்துகொண்ட பின்னரே கூடுதல் முறையாகும். ஒருவரையொருவர் பெறல் வேண்டுமென்னும் உள் ள நிகழ்ச்சியும், இடைவிடாது நினைத்தலும், உண்ணுமையாலுளதாம் உடல் மெலிவும், தனக்கு ஆக்கமாவன இவையெனத் தனக் குள்ளே சொல்லிக் கொள்ளுதலும், நாணத்தின் எல்லே கடத்த லும், காண்பனவெல்லாம் அன்புடையார் உருவாகவே தோற்று தலும், தம்மை மறத்தலும், மன மயக்கமுறுதலும், உயிர் நீங்கி ற்ைபோன்று உயிர்ப் படங்குதலும் ஆகிய இவை யொன்பதும் உயிரோரன்ன செயிர்தீர் நட்பாகிய காமவுணர்வினைச் சிறப்பி ப் பனவாதலின், இவற்றைக் களவொழுக்கத்திற்குச் சிறந்தன வாகக் கூறுவர் முன்னேயோர், வேட்கை முதல் சாக்காடிருக