பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 தொல்காப்பியம் நுதலியபொருள் றுண்டாயவிடத்தும் எனத்தோழியிற் கூட்டத்திடத்தே தலைவன் கூற்று நிகழ்தல் இயல்பாகும். அன்புற்ருரிருவர் துணையாய்க் கூடுதற்கு நிமித்தமாவன பன்னிரண்டாம். அவையாவன. காட்சி, ஐயம், துணிவு என முன்னர்க் கூறிய மூன்றும், குறிப்பறிதலின் பயனுய்த் தோன்றும் வேட்கை முதல் சாக்காடிருகச் சொல்லப்பட்ட ஒன்பதுமாகும். இவை பன்னிரண்டுமே அன்பொடு புணர்ந்த ஐந்திணமருங்கிற் காமக் கூட்டத்திற்கு நிமித்தமாவனவாம். இவற்றுள் முற்கூறிய காட்சி, ஐயம், துணிவு என்பன மூன்றும் அன்பினைந்திணைக்குரிய தாதலேயன்றி ஒருதலைக் காமமாகிய கைக்கிளேக்குரிய குறிப்புக் களாகவும் அமையும். நோக்குவவெல்லாம் அவையே. போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு எனப் பின்னர்க்கூறிய நான்கு நிலைகளும் ஒத்த அன்பால் நிகழும் வழி ஐந்திணையாதலேயன்றி ஒவ்வாக் காமத்தால் நிகழும்வழிப் பெருந்திணைக்குரிய பொருந்தா நிலைகளாகவும் கருதப்பெறும். முதல், கரு, உரி யென்னுந் திணைக் கூறுபாட்டுடன் பொருந்திய யாழோர் நெறி யினையொத்த காமக்கூட்டம் வேட்கை, ஒருதலையுள்ளுதல், மெலி தல், ஆக்கஞ்செப்பல், நானுவரையிறத்தல் என்னும் ஐந்து நிலைகளையுந் தனக்குரிய சிறப்பு நிலைக்களஞகக் கொள்ளும் என்பர் ஆசிரியர். தோழியின் உடம்பாடுபெற்றுத் தலைமகளைக் கூடிய தலை மகன் அவளே மணந்துகொள்ளும்வரையும் கூறும் பொருள்களைத் தொகுத்துக் கூறுவது இருவகைக் குறியிழைப்பாகியவிடத்தும்" எனத் தொடங்கும் இவ்வியற் சூத்திரமாகும். இதனைத் தலைவி கூற்ருகக்கொண்டு பொருளுரைப்பர் நச்சிளுர்க்கினியர். தலைவி யின்பால் நிலைபெற்றுள்ள நாணமும் மடனும் பெண்மைக்கு அங்க மாதலால் காமவொழுக்கத்தின்கண் குறிப்பினுலும் இடத்திலுை மல்லது அவள்பால் வேட்கை புலப்படுதலில்லை. வேட்கை யுரையாத கண்கள் யாண்டுமின்மையால் வேட்கை காரணமாக