பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#23 தொல்காப்பியம் நுதலியபொருள் படுத்துந் தூதுவராகத் தாமே நின்று கூடுதலும் உண்டு அந்நிலை மெய்ப்பாட்டியலுள் புகுமுகம் புரிதல் முதலிய மெய்ப்பாடு பன்னிரண்டானும் நன்கறியப்படும். எனவே தலைவன் பாங்கனது உதவிபெற்றுக் கூடுதலும் தோழியின் உடன்பாடு பெற்றுக் கூடுதலுமாகிய இவை யாவர் மாட்டும் நிகழவேண்டுமென்னும் வரையறையில்லை யென்பது பெறப்படும். இயற்கைப் புணர்ச்சியின் பின்னர்த் தலைவனது சொல்லின் எல்லையைக் கடத்தல் தலைமகளுக்கு அறனன்ருகலானும் தான் செல்லுதற்குரிய இடத்தைத் தானே யுணர்வளாதலானும் தாங்கள் மீண்டும் கண்டு அளவளாவுதற்குரிய ஓரிடத்தை யறிவிக்கும் பொறுப்பு தலைமகளைச் சார்ந்ததாகும். தோழியால் அறிவிக்கப் பட்டுப் பொருந்துமிடமும் உண்டு. களவிற்புணர்ச்சி தோழியின் துணையின்றி மூன்று நாளைக்குமேல் நிகழ்தலில்லை. அம்மூன்று நாளேக்குள்ளும் தோழி யின் துணை விலக்கப்படுதலில்லையென்பர் ஆசிரியர். எனவே இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம் என்னும் மூன்றுநாளெல்லையளவும் தலைவன் தோழியின் உதவியின்றி அவளறியாது தலைமகளைக்கண்டு அளவளாவுதல் கூடுமென் பதும், அம்மூன்று நாளைக்குமேலாயின் தோழியின் உதவியின்றித் தலைவி எதிர்ப்படுதற்கு அரியளென்பதும், அம்மூன்று நாளைக் குள்ளேயே தோழியின் உடன்பாட்டைப் பெறுதலுமுண்டென்பதும் ஆசிரியர் கருத்தாதல் உய்த்துணரப்படும். பலவகையானும் தலைமகள்பாலுளவாம் நன்மைகளை நாடு வார் பக்கத்தினை ஆராயும் ஆராய்ச்சி தலைவனுக்கு வேண்டு மாதலானும், தாங்கள் மேற்கொண்ட அன்பின் வழிப்பட்ட களவொழுக்கம் ஒன்றிய அன்புடைய துணையாகிய தோழியால் புறத்தாரறியாது நிலைபெற்று நிகழ்தல் வேண்டுமாதலானும்,