பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் 13? தொகையில் ஒத்துடையந்தணன் எரிவலங்கொள்வான்போல்” எனவரும் தொடரில் புரிநூலந்தணராகிய வேதியரது வேள்விச் சடங்கு உவமையாக எடுத்துரைக்கப்படுகின்றது. இத்தொடர்ப் பொருளை ஊன்றிநோக்குங்கால் இங்ங்ணம் எரிவலம் வருதல் ஒத்துடையந்தணராலன்றி ஏனைய தமிழ் மக்களால் மேற் கொள்ளப்படாத சடங்கென்பது நன்கு புலனும். இனி, இக்கற்பியலிற் கூறப்படும் ஏனைய பொருள்களை நோக்குவோம். தலைவன் தலைவி ஆகிய இருவரும் உலகத் தாரறிய மணம் புரிந்து வாழும் கற்பியல் வாழ்விலே தலைவன், தலைவி, தோழி, காமக்கிழத்தியர், அகம்புகல் மரபின் வாயில்கள், செவிலி,அறிவர்,பாணர், கூத்தர்,இளையோர், பார்ப்பார் என்போர் உரையாடுதற்குரிய இடங்களையும் பொருள்வகையினையும் அவர் தம் செயல் முறைகளையும் இவ்வியல் 5-முதல் 14-வரையுள்ள சூத்திரங்களாலும், 24-முதல் 30-வரையுள்ள சூத்திரங்களாலும், 36-ம் சூத்திரத்தாலும் ஆசிரியர் விரித்துக் கூறியுள்ளார். தலைவன் தேற்றத் தெளியும் எல்லையினைத் தலைவி கடந் தனளாயினும் களவின்கண் தலைவி செய்த குறியைத் தப்பினுலும் தலைவன், மனம் சிறிது வேறுபட்டுப் புலத்தலும் அவ்வேறுபாடு நிலைத்து நிற்ப ஊடுதலும் உண்டு. அங்ங்னம் தலைவன் புலந்து ஊடிய நிலையில் அவனுள்ளம் அமைதியடைதற்குரிய பணிந்த மொழிகளைத் தோழி கூறுவாள். பரத்தையரை விரும்பியொழுகும் தலைவனது புறத்தொழுக்கத்தை நீக்குதல் கருதியும் தலைவி மட னென்னுங் குணத்தால் அடங்கியொழுகும் எளிமையுடையளாதல் கருதியும் தலைவனை நோக்கி அன்பிலே கொடியை யெனத் தோழி இடித்துரைத் தற்கும் உரியள். தலைவனது உள்ளக் குறிப்பை யறிதல் வேண்டியும் தன்மனத்து ஊடல் நீங்குமிடத்தும் தலைவைெடு உறவல்லாதாள்போன்று தலைவி வேறுபடப் பேசு தற்கு உரியள்.