பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் $4% மனைவி யென்போரிடையேயுளதாம் பிணக்கத்தினைத் தீர்த்து வைக்கும் நிறைந்த சிறப்பினையுடைய வாயில்களாவர். விணகருதிப் பிரிந்த தலைமகன், தன் உள்ளம்போன்று உற்றுழியுதவும் பறவையின் வேகத்தையுடைய குதிரையையுடைய ளுதலின், தான் வினைமுற்றி மீளுங் காலத்து இடைவழியிற் றங்காது விரைந்து வருதலையுடையனவன் என அவன் தலைவி யின்யால் வைத்த பெருவிருப்பினைப் புலப்படுத்துவர் ஆசிரியர். பொருளியல் மேற்சொல்லப்பட்ட இயல்களிலும் இனிச் சொல்லும் இயல் களிலும் வரும் பொருளினது தன்மையினை யுணர்த்துதலின் இது பொருளியலென்னும் பெயர்த்தாயிற்று. அகப்பொருள், புறப் பொருள் என்பன இரண்டு பொருண்மையினும் எஞ்சி நின்றன கூறினமையின் இதனை ஒழிபியலெனினுங் குற்றமில்லை யென்பர் இளம்பூரணர். சொல்லதிகாரத்திற் கூறிய சொற்களே மரபியலின் இரு திணை ஐம்பால் இயல் நெறி வழாமைத் திரியில் சொல் என்ப ராதலின் அவை ஈண்டுத் தம்பொருளே வேறுபட்டிசைப்பினும் பொருளாமெனவும், இப்பொருளதிகாரத்து முன்னர்க் கூறிய பொருளிற் பிறழ்ந்திசைப்பனவும் பொருளாமெனவும் அமைத்துச், சொல்லுணர்த்தும் பொருளும் தொடர்மொழி யுணர்த்தும் பொருளும் ஒருங்கே கூறலிற் பொருளியலென்ருர் என்பர் நச்சி ஞர்க்கினியர். இவ்வியலிற் கூறப்பட்டன யாவும் சொற்பொரு ளின் வழுவமைதியும் பொருளின் வழுவமைதியும் என இரு பகுதிப் படுமென்பதும், புறத்திணையியலுட் புறத்திணைவழுக் கூறி அகப் பொருட்குரிய வழுவே ஈண்டுக் கூறுகின்றதென்பதும் அவர் கருத்து.