பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#44 தொல்காப்பியம் நுதலியபொருள் குண்டாகிய தொடர்பினைத் தம் பெற்ருேர்க்கு அறிவித்தல் வேண்டுமென்னுங் கருத்தினளாகிய காலத்தன்றித் தேஈழி தானே அறத்தொடு நிற்கும் முறைமையிலள். அங்ங்ணம் அறத்தொடு நிற் குங்கால் தலைவியின் குடிப்பிறப்பிற்கும் செவிலியின் அறிவிற்கும் தலைவியின் நாணம், கற்பு முதலிய பெருமைக்கும் தனது காவலுக் கும் தலைவனுக்குரிய அறிவு, நிறை, ஓர்ப்பு. கடைப்பிடியென்னும் பெருந்தன்மைக்கும் தவறு நேராதபடி இக்களவொழுக்கம் நிகழ்ந்த முறையினை முரண்பாடில்லா மொழிகளால் தோழி செவிலிக்கு அறிவுறுத்தல் மரபாகும் என்பர் களவியலுரை யாசிரியர். செவிலிக்குத்தோழி அறத்தொடு நிற்குங்கால், தன்னிகரற்ற தலைவன் இளையோராகிய எங்கள்பால் எளியணுக நடந்து கொண்டான் என்று கூறுதலும், இத்தகைய அருளும் சிறப்பு முடையான் அத்தோன்றல் எனத் தலைவனை உயர்த்துப் புகழ்தலும், தலைவன் தலைவியென்னும் இருவரும் அன்பினுல் நிரம்பிய வேட் கையுடையாரெனக் கூறுதலும், அத்தகைய தலைவனுக்கே நம் தலைவியை மணஞ்செய்து கொடுத்தல் வேண்டுமென்னும் குறிப்புத் தோன்றக்கூறுதலும், தலைவியினது நோயினைத் தணித் தல் வேண்டி வேலன் முதலியோரைக்கொண்டு வெறியாடல் முதலியன நிகழ்த்தியபொழுது அவை தலைவியின் நோயைத் தனித்தற்குரியன அல்ல எனத் தெரிவித்துத் தடுக்குமுகமாக அவர்கள்பால் சிலவற்றை வினவுதலும், தலைவன் யாதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டு வருங்கால் தன் கருத்தின்றித் தலைமகளை எதிர்ப்பட்டானெனக் கூறுதலும், தலைமகனும் தலைமகளும் ஒரு வரை யொருவர் சந்தித்தபொழுது நிகழ்ந்த நிகழ்ச்சியினை நிகழ்ந்த முறையே உண்மையாக எடுத்துரைத்தலும் என இவ்வேழு வகையாலும் களவொழுக்கத்தை வெளிப்படுத்தல் முறையென்பர் தொல்காப்பியர்.