பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#43 தொல்காப்பியம் நுதலியபொருள் மின்ருமெனவும் விளக்கங்கூறுவர் இளம்பூரணர். எல்லாவுயிர்க்கும் இன்பம் பொது எனவே ஒழிந்த அறனும் பொருளும் எல்லா வுயிர்க்கும் நிகழா, மக்கட்கே சிறந்து வரும் எனக் கருத்துரைப்பர் நச்சிஞர்க்கினியர். பரத்தையிற் பிரிவு காரணமாகப் பாணர் முதலியோரை ஊடல் தீர்க்கும் வாயிலாக அனுப்புதல், மருதநிலத் தலைவர்க்கே சிறப்புரிமையுடையதாயினும் நானிலத் தலைவர்க்கும் பொதுவாக உரியதாகும். அவ்வழிப் பிரியும் பிரிவு தம் ஊரைக்கடந்து நிகழ் வதில்லை. இடைவிடாது இன்பம் நுகர்தலோடு மனையறம் நிகழ்த்தும் உரிமையை உறுதியாக விரும்புதலானும், வினைசெய்தலில் விருப் புடைய ஆண்மக்கள் பிரிவர் எனக்கருதி அஞ்சும் அச்சம் மகளிர்க்கு இயல்பாதலானும், களவொழுக்கத்தைப் புறத்தார்க்கு வெளிப்படுத்துமென்று அஞ்சும்படி தோன்றிய அம்பலும் அலரும் ஆகிய இருவகைக் குறிப்பிலுைம், தலைமகனது வரவினை எதிர் நோக்கியிருந்த நிலையில் வந்த அவனுடன் அளவளாவுதற்கு இயலாதபடி இடையூறு நேர்தலானும் தலைவளுேடு உடன்போதற் குறிப்பும் ஏன் இன்னும் மணஞ்செய்து கொள்ளவில்லை' என அவனை வினவுங் குறிப்பும் தலைமகளிடத்தே தோன்றும். வருத்த மிகுதியைக் குறித்த நிலையில் மனைவாழ்க்கையில் இரக்கம் தோன்றுதலும் உரித்தாம். தலைவன் பணிந்துழி அச்சமும் நாணமுமின்றித் தலைவி அப்பணிவினை யேற்றுக் கொள்ளுதலும், தலைவன் தன் தலைமைக்கு மாருகத் தலைவியைப் பணிதலும் புலவிக்காலத்து உரியனவாம். களவுக்காலத்துத் தலைவியின் நலம் பாராட்டிய தலைவன், கற்புக்காலத்தும் அவளது எழில் நலம் பாராட்டுதற்கு உரியன்.