பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15? தொல் காப்பியம் நுதலியபொருள் நன்கு அமைத்திருத்தல் வேண்டும். தலைவியையும் தலைவனையும் உயர்த்துக் கூறும் கூற்றும் தோழியாகிய அவளுக்கே ஒப்பவுரிய தாகும். அகப்பொருள் ஒழுகலாற்றில் உரையாடுதற்குரிய வாயில் களாகிய பாணர் கூத்தர் முதலியோர், தாம் தாம் சொல்லத் தகுவனவற்றைத் தவறின்றி வெளிப்படையாகக் கூறுதல் வேண் டும் என இவ்வியல் 45-ம் சூத்திரத்தில் ஆசிரியர் தெளிவாகக் குறித்துள்ளார். ஆகவே மேற்குறித்த வாயில்கள் அல்லாத தலைமகளும் நற்ருயும் தாம் கூறக் கருதியவற்றை மறைத்துச் சொல்லப் பெறுவர் எனவும், வருகின்ற (46-ம்) சூத்திரம் மறைத் துச் சொல்லுதலாகிய உள்ளுறை கூறுவதாதலின், அத்தகைய உள்ளுறை பாணர் கூத்தர் முதலிய வாயில்களுக்கு இல்லையென இச்சூத்திரத்தால் விலக்கப்பட்டதெனவும், வாயில்களாவார் குற் றேவல் முறையின ராதலானும், தலைமக்களாகிய கேட்போர் பெரியோராதலானும், வெளிப்படக் கூருக்கால் பொருள் விளங் காமையானும், பொருள் விளங்காதாயின் இவர்களது கூற்றிற்குப் பயனின்மையானும் வாயில்களாவார் மறைத்துக் கூருது வெளிப் படவே கூறுதல் வேண்டுமெனவும் உரையாசிரியர் கூறிய விளக்கம் இங்கு நோக்கத்தகுவதாகும் உடனுறை, உவமம், சுட்டு, நகை, சிறப்பு என உள்ளுறை ஐந்து வகைப்படும் என்பர் ஆசிரியர். 'உடனுறையாவது உடை னுறைவதொன்றைச் சொல்ல அதனனே பிறிதொரு பொருள் விளங்குவது. உவமம் என்பது உவமையைச் சொல்ல உவமிக் கப்படும் பொருள் தோன்றுவது. சுட்டு என்பது ஒரு பொருளைச் சுட்டிப் பிறிதோர் பொருட்படுதல். நகையாவது நகையிற்ை பிறிதொரு பொருள் உணர நிற்றல். சிறப்பு என்பது இதற்குச் சிறந்தது இதுவெனக் கூறுவதேைன பிறிதோர் பொருள் கொளக்கிடப்பது' என விளக்கங்கூறுவர் இளம்பூரணர்.