பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 தொல்காப்பியம் எனச் சிறப்பித்துரைக்கின்ருர். இயற்கைப் புணர்ச்சியைக் காமப் புணர்ச்சி எனத் தொல்காப்பியர் கூறியவாறே இவரும் கூறு கின்ருர், இந் நூற் சூத்திரங்களிற் பெரும்பாலன, தொல்காப்பியத்தின் வழியே இயற்றப்பட்டனவாதலின், தொல்காப்பியச் சூத்திரங் களுக்குப் பொருள் விரிப்பன போன்று அமைந்துள்ளன. இந் நூலாசிரியராகிய இறையனர் தொல்காப்பியனர் கூறிய பொருளையேயன்றித் தொல்காப்பியச் சூத்திரங்களையும் சூத்திரப் பகுதிகளையும் தம் நூலில் ஆங்காங்கே இணைத்துக் கூறியுள்ளார்." தொல்காப்பியத்திற் கூறப்படாதனவும் கால நிலைமைக்கேற்ப ஒரு சில சூத்திரங்களில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இவை யெல்லாவற்றையும் உற்றுநோக்கி ஆராயும் வழி, களவியல் என்னும் இந்நூல், இறையனர் என்னும் பெயரினராகிய புலவ ரொருவரால் தொல்காப்பியத்தின் வழி நூலாக இயற்றப் பெற்றிருத்தல் வேண்டுமென்பது துணியப்படும். இறையனர் களவியல் என்னும் இந்நூலுக்குக் கணக்காயனர் மகளுர் நக்கீரனர் உரைகண்டார் என்னும் செய்தியினைப் பண்டைப் பேராசிரியர் பலரும் உடன்பட்டு மொழிதலால்’ இந் நூலாசிரியராகிய இறையனர் கடைச்சங்கப் புலவராகிய நக்கீரனுர்க்குக் காலத் தாற் சிறிது முற்பட்டவராதல் வேண்டும். குறுந்தொகையில் தொகுக்கப்பட்ட கொங்கு தேர் வாழ்க்கை என்னும் பாடலைப் 1. இறையனர் களவியலிலுள்ள 12, 17, 18, 19, 21, 22, را روی س 39 و 56 , 54 و 50 و 47 و 43 و 42 . 41 , 37 و 36و30ه 29 ,24 சூத்திரங்கள், தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் வரும் 12, 134, 128, 129, 130, 137, 138. 12, 207, 28, 34, 186, 188, 22 , 185, 178, 154, 177, 311. சொல்லதிகாரம் 293-ஆகிய சூத்திரங் களே முறையே பின்பற்றி யெழுந்தனவாகும். 2. கடைச்சங்கத்தாருட் களவியற் பொருள்கண்ட கணக் காயனர் மகனர் நக்கீரர் (தொல்-மரபு. 94 உரை) என்பர் பேராசிரியர்.