பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் i55 முணர்த்திப் பிழம்பு உணர்த்தப்படாதன என்ற பகுப்பினுள் இறையனர் களவியலுரையாசிரியர் அடக்கிக் காட்டினமை இங்கு நினைக்கத் தகுவதாகும். மெய்ப்பாட்டியல் மனத்தினுல் உய்த்துணரினல்லது ஐம் .ெ பா றி க ள | ல் உணர்ந்துகொள்ள முடியாத பொருள்கள் சிலவற்றை மேல் பொருளியலில் இறுதியில் தொகுத்தோதினர். வடிவமில்லாதன வாகிய அப்பொருள்களையும் பொறி வாயிலாக மனங்கொள்ளு தற்கு ஏதுவா வன மெய்ப்பாடுகளாகும். உலகத்தாரது உள்ள நிகழ்ச்சி அவரது உடம்பின்கண் தோன்றும் கண்ணீரரும்பல், மெம்ம்மயிர் சிலிர்த்தல், வியர்த்தல், நடுக்கம் முதலிய புறக்குறி களால் காண்போர்க்குப் புலனுகுந்தன்மை மெய்ப்பாடெனப்படும். ஒருவன் புலி முதலிய கொடிய விலங்குகளைக்கண்டு அஞ்சிய நிலையில், அவனுள்ளத்திலே இன்னது செய்வதென்று ஒன்றுந் தோன்ருது கலங்கும் கலக்கமும், பின் எவ்வாறேனும் தப்பி மறைதல் வேண்டுமென்ற கருத்தும், அவனது உடம்பின் கண்ணே நடுக்கமும், வியர்த்தலும் உண்டாதல் இயல்பு. இவற்றுள் அச்சத் திற்கேதுவாகிய புலி முதலியன சுவைப்படுபொருள் எனப் படும். அவற்றைக் கண்டதுமுதல் அவனுள்ளத்திலே நீங்காது நின்ற அச்சம் சுவையெனப்படும். அதுகாரணமாக அவனுள்ளத் திலே தோன்றும் கலக்கமும் மறைதற்கருத்தும் குறிப்பெனப்படும், அக்குறிப்பின்வழி அவனது உடம்பிலே வெளிப்பட்டுத் தோன்றும் நடுக்கமும் வியர்த்தலும் விறல் எனப்படும். விறலை வடநூலர்ர் சத்துவம் என வழங்குவர். நடுக்கமும் வியர்ப்பும் ஆகிய சத்துவங்கள், அச்சமுற்ருளுகிய அவனுக்கேயன்றி, அஞ்சி ஓடி வரும் அவனைக்கண்ட ஏனையோர்க்கும் நன்கு புலனுவன. குறிப்பும் சுவையுணர்வும் ஆகிய ஏனையவை அவன் மன நிகழச்சி