பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 தொல்காப்பியம் துதலியபொருள் மெய்ப்பாடுகளின் வைப்பு முறைக்குப் பேராசிரியர் கூறும் கார ணங்கள் நினைக்கத் தக்கனவாகும். எண்வகை மெய்ப்பாடுகளுள் நகை வென்பது எள்ளல், இளமை, பேதமை, மடின் என இந் நான்கும் பற்றி நிகழும் என்பர் ஆசிரியர். எள்ளல்-இகழ்தற் குறிப்பு. இளமை-விளே வறியாத இளம்பருவ இயல்பு. பேதமை அறிவின்மை. மடன் பெரும்பான்மையும் பிறர் அறிவிக்க அறிந்து அறிந்தவற்றை நெகிழ விடாமை. மடம் என்பது பொருண்மை யறியாது திரியக் கோடல் என்றும், பேதமை என்பது கேட்டதனை உய்த்துணராது மெய்யாஈக் கோடல் என்றும் இவ்விரண்டிற்கும் வேறுபாடு கூறுவர் இனம்பூரணர். மெய்ப்பாடாகப் புறத்தே வெளிப்படும் நகையொன்றே, தன் தோற்றத்திற்குரிய காரணங்களாக அகத்தே நிகழும் எள்ளல், இளமை, பேதைமை, மடன் என்னும் இந்நால்வகை மனக் குறிப்புக்களும் புலப்படுதற்குரிய நிலையில் நால்வகைப்பட்டுத்தோன்றும் என்பார், உள்ளப்பட்ட நகை நான்கென்ய" என்ருர் ஆசிரியர். இவ்வாறே அழுகை முதல் உவகையிருகவுள்ள ஏனைய மெய்ப்பாடுகளும் தத்தம் தோற்றத் திற்குக் காரணமாக அகத்தே தோன்றும் சுவைப்பொருள்களுக் கேற்பப் புறத்தே நால்வகைப்பட நிகழும் என்ற நுட்பத்தினை அவற்றின் இயல்புரைக்கும் சூத்திரங்களில் ஆசிரியர் புலப் படுத்தியுள்ளார். இனி, எள்ளல் பற்றிய நகையென்பது, தான் பிறரை இகழ்ந்து நகுதலும் பிறரால் இகழப்பட்ட நிலையில் தான் நகுதலும் என இரண்டாம். இளமை பற்றிய நகையென்பது, தன் இளமை காரணமாகப் பிறரைக்கண்டு நகுதலும் பிறரது இளமைகண்டு தான் நகுதலும் என இருவகைப்படும். தன் பேதைமை பொருளாகத் தோன்றுவதும் பிறர் பேதைமை பொருளாகத் தோன்றுவதும் எனப் பேதைமை பற்றிய நகை