பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 தொல்காப்பியம் நுதலிய பொருள் இற்செறிக்கப்படுதல் காரணமாகத் தான் தலைவனது கூட்டத்தை மறுத்த ஏதத்திற்கு நாணியும் அஞ்சியும் அவன் முன்னர் வெளிப் படாது மனையகத்தே மறைந்தொழுகுங் கருத்துடையளாதல் கரந் திடத் தொழிதல்' எனப்படும். இங்ஙனம் தலைவன் முன்னர்த் தோன்ருது மறைந்தொழுகுவாள் ஒருநாள் எதிர்பாராத நிலையில் அவனைக் காணலுற்றபொழுது எல்லையற்ற பெருமகிழ்ச்சி யுடைளா தல் கண்டவழி யுவத்தல் என்னும் மெய்ப்பாடாம். இவை நான்கும் களவினது ஐந்தாங் கூறெனப்படும். பூவுஞ் சாந்தும் யூனுந் துகிலும் முதலாயின கொண்டு தன்னைப் புறத்தே அலங்கரித்த நிலையிலும் தலைமகள் தன் அன் பிற்கினிய தலைவனைக் கூடப் பெருமையால் தன் அகத்தே மகிழ்ச்சியின்றி நெஞ்சழிந்து சோர்தல் புறஞ் செயச் சிதைதல்' எனப்படும். சுற்றத்தார் பலரும் சூழ அவர்கள் நடுவே தான் வாழும் நிலையிலும் தலைவனது துணையின்றி வருந்துதலால் தான் தனியள் என்று அறிவிக்கும் கருத்தினளாதல் புலம்பித் தோன்றல்' எனப்படும். தனிமையுள்ளத்தளாகிய தலைவி கையுங்களவுமாகப் பிடிப்பட்ட கள்வரைப் போன்று தான் சொல்லுவனவற்றை மனத் தடுமாற்றந்தோன்றச் சொல்லுதல் கலங்கி மொழிதல்' எனப் படும். தனது மனக்கலக்கத்தை யடக்கிக் கொண்டு பேசும் நிலை யிலும் தனது செயலற்ற தன்மை தோன்றக் கூறுதல் கையற வுரைத்தல் எனப்படும். தனிமை விகற்பமாகிய இவை நான்கும் களவின் ஆரும் கூறென்பர் ஆசிரியர். கையறவுரை தோன்றியதன் பின்னர் நிகழ்வன ஒரு தலைக் காமமாகிய கைக்கிளைக்கும் ஒவ்வாக் காமமாகிய பெருந்திணைக் கும் மெய்ப்பாடாவனவன்றி நடுவணைந் திணையெனப்பட்ட நற் காமத்துக்கு ஏற்புடையன அல்ல எனவும், களவொழுக்கத்தினுள் கையறவுரைத்தல்' என்ற எல்லையினை மீறிய மெய்ப்பாடுகள் கூறப் படாவெனவும் அறிவுறுத்தக் கருதிய ஆசிரியர், சையறவுரைத்தல்' என்ற மெய்ப்பாட்டினைக் களவொழுக்கத்தின் இறுதிக்கண்