பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமவியல் 175 அமைந்த பொதுத்தன்மையும் ஆகிய இவை இன்னவென வெளிப் படையாக உணர் தற்கேற்ற சொல் நடையினை உடையது ஏனை யுவமம் எனப்படும். ஒருபொருட்கு ஒருபொருளே உவமையாகக் கூறுமிடத்து, அவ்விரண்டற்கும் பொதுவாகியதோர் தொழில்காரணமாகவும், அத்தொழிலாற்பெறும் பயன் காரணமாகவும், மெய்யாகிய வடிவு காரணமாகவும், மெய்யின்கண் நிலைபெற்றுத் தோன்றும் உருவா கிய வண்ணங் காரணமாகவும் ஒப்பித்துரைக்கப்படுமாதலின், உவமத்தாற் பொருள் தோன்றும் தோற்றம் வினை, பயன், மெய், உரு என நால்வகைப்படும் என்பர் ஆசிரியர். வினையாற் கிடைப்பது பயனுதலின் வினையின் பின்னர்ப் பயனும், மெய்யின்கண் புலப்பட்டுத் தோன்றுவது நிறமாதலின் மெய்யின் பின்னர் உருவும் முறையே வைக்கப்பட்டன. வடிவும் வண்ணமும் பண்பென ஒன்ருக அடங்குமாயினும் கட்புலனும் பண்பும் உற்றுணரும் பண்பும் எனத் தம்முள் வேருதல் நோக்கி மெய்யினையும் உருவினையும் வேறு பிரித்துரைத்தார். மெய்யாகிய வடிவினை இருட்பொழுதிலும் கையில்ை தொட்டறிதல் கூடும். வண்ணமாயின் அவ்வாறு தொட்டறிந்துகொள்ளுதல் இயலாது. புலியன்ன மறவன் என்பது, புலி பாயுமாறு போலப் பாய்வன் எனத் தொழில்பற்றி வந்தமையின், வினை உவமம் எனப்படும். மாரியன்ன வண்கை' என்பது, மாரியால் விளக்கப் படும் பொருளும் வண்கையாற் பெறும் பொருளும் ஒக்கும் என்பதுபட வந்தமையின் பயனுவமம் எனப்படும். துடியிடை' என்பது, மேலுங்கீழும் அகன்ற பரப்புடையதாய் அமைந்து நடுவே சுருங்கி வடிவொத்தமையின், மெய்யுவமம் எனப்படும். 'பொன் மேனி என்பது, பொன்னின்கண்ணும் மேனியின்கண்ணும் உள்ள நிறம் ஒத்தலால் உருவுவமம் எனப்படும். வினை, பயன், மெய்: உரு என்னும் இந்நான்கனுள் அளவும் சுவையும் தண்மையும்