பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமவியல் 177 மேற்கூறியவாறு ஒரு பொருட்கு அதனின் உயர்ந்த பொருளையே உவமையாகக் கூறினும் அவ்வுவமையானது, சிறப்பு நலன், காதல், வலி என்ற இந் நான்கனுள் ஒன்றை நிலைக்கள மாகக்கொண்டு தோற்றுதல் வேண்டும் என்பர் அறிஞர். அவற் றுள் சிறப்பு என்பது, உல்கத்துள் இயல்பு வகையாலன்றிச் செயற்கை வகையாற் பெறுவது. நலன் என்பது ஒருபொருட் கண் இயல்பாய்த் தோன்றிய நன்மை. காதல் என்பது நலனும் வலியும் இல்லாத நிலையிலும் காதல் மிகுதியால் அவையுள்ளன வாகக் கொண்டு கூறுவது. வலி என்பது ஒரு பொருளுக்குத் தன் தன்மையால் உளதாகிய ஆற்றல். 'முரசு முழங்குதானே முவருங் கூடி அரசவை யிருந்த தோற்றம் போலப் பாடல் பற்றிய பயனுடை யெழாஅற் கோடியன் தலைவ' (பொருந-54-7) என்புழி, பெருமைமிக்க தமிழ் வேந்தர்களாகிய சேர சோழ பாண்டியர் மூவரும் தம்மிற் பகைமை நீங்கி ஒன்றுகூடி அரசவை யில் வீ ற்றி ரு ந் த தோற்றம்போல நிருத்த கீதவாத்தியம் என்னும் இம்மூன்றும் பிரிவின்றி ஒத்து நிகழும் வண்ணம் கூத்தர் தலைவன் தங்கியிருந்த செய்தி பேசப்படுதலால் இவ்வுவமைச் சிறப்பின நிலைக்களமாகக்கொண்டு பிறந்ததாகும். " ஒவத்தன இடனுடை வரைப்பின் " (புறம்-251) என்புழி, சித்திரம் போலும் வனப்பமைந்த இடத்தினையுடைய நகரம் என அதன் நலம்தோன்ற உவமை கூறினமையின் இவ் வுவமை நலன் என்பதனை நிலைக்களமாகக்கொண்டு பிறந்ததாகும். "பாவையன்ன பலராய் மாண்கவின்" (அகம்-98) என்பது பாவையினே யொத்த பலரும் ஆராயத்தக்க மாண்பு அமைந்த என்மகளது வனப்பு எனத் தாய் தன் மகளிடத்தே