பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமவியல் 179 'வரை புரையும் மழகளிற்றின் மிசை" (புறம்-38)என முதற் பொருளோடு முதற்பொருளும்,

  • தாமரை புரையுங்காமர் சேவடி' (குறுந்-கடவுள்) எனச் சினைப்பொருளோடு சினைப்பொருளும்,

'அடைமரை யாயிதழ்ப் போதுபோற் கொண்ட குடை நிழற் ருேன்றுநின் செம்மல்.’ (கலித்-84) என முதற்பொருளோடு சினைப்பொருளும், 'நெருப்பி னன்ன சிறுகட்பன்றி” (அகம்-84) எனச் சினைப்பொருளோடு முதற்பொருளும் வேண்டியவாறு உவமஞ் செய்தற்குரியன எனவும், அங்ங்னஞ் செய்யுங்கால் மரபு பிறழாமைச் செய்யப்படும் எனவும் கருத்துரைப்பர் பேராசிரியர். 'பவளம்போற் செந்துவர்வாய்' என்பது உவமையும் பொரு ளும் ஆகிய அவ்விரண்டிற்கும் பொதுவாயமைந்த செம்மைக் குணத்தினைச் சுட்டிக்கூறி உவமஞ் செய்தமையால் சுட்டிக்கூறிய உவமம் எனப்படும். இங்ங்ணம் உவமையுடன் பொருளுக்கு அமைந்த ஒப்புமைக் குணத்தினைச் சுட்டிக்கூருது பவளவாய்' என்ருற் போன்று வரும் உவமம் எனப்படும். இங்ங்ணம் சுட்டிக் கூருவுவமம் வருமாயின், அதன்கண் அமைந்த உவமத்தினையும் பொருளினையும் இணைத்து நோக்கி அவ்விரண்டிற்கும் பொது வாய்ப் பொருந்தியதோர் ஒப்புமைக்கு ணம் பற்றி வினை பயன் மெய் உரு என்னும் நான்கினுள் இஃது இன்ன உவமையென்று துணியப் படும் என்பர் ஆசிரியர். பவளவாய்' என உவமை கூறிய நிலை யில்,"வல்லென்ற பவளத்திற்கும் மெல்லென்ற உதட்டிற்கும் உள்ள வன்மை மென்மை பற்றி இங்கு உவமை கொள்ளுதல் பொருந் தாது, அவ்விரண்டினும் அமைந்த செம்மை நிறம் பற்றியே இங்கு உவமஞ் செய்தது என இவ்வாறு ஒப்பு நோக்கியறிந்து