பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமவியல் i8% யெச்சமாகவும், சாத்தன் புலி போலும் என வினைமுற்ருகவும், அன்ன, இன்ன என இடைச் சொல்லாகவும் இங்ங்னம், பல்வேறு வடிவங்களில் உவமவுருபுகள் பயின்று வருதல் பற்றிக் கூறுங் காலைப் பல் குறிப்பின என அவ்வுருபுகள் குறிக்கப்பட்டன. அன்ன, ஆங்க, மான, விறப்ப, என்ன, உறழ, தகைய, நோக்க என்னும் எட்டும் வினையுவமத்திற்குரிய உருபுகளாகும். இவற்றுள் அன்ன என்பது ஏனைய உவமைகளுக்கும் உரியதாய் வருதல் உண்டு. எள்ள, விழைய, புல்ல, பொருவ, கள்ள, மதிப்ப, வெல்ல, வீழ என்னும் எட்டுருபுகளும் பயனிலை யுவமைக்குச் சிறந்தனவாகும். கடுப்ப, ஏய்ப்ப, மருள, புரைய, ஒட்ட, ஒடுங்க, ஒட, நிகர்ப்ப என்ற எட்டும் மெய்யுவமத்திற்குரிய உருபுகளாகும். போல, மறுப்ப, ஒப்ப, காய்த்த, நேர, வியப்ப, நளிய, நந்த என்னும் எட்டுருபுகளும் உருவுவமத்திற்குச் சிறந்துரியன்வாகும். இவ்வாறு நால்வகை உவமைகளுள் இன்னவுவமைக்கு இன்னின்ன வுருபுகள் சிறப்புரிமை யுடையன எனத் தொல்காப் பியனர் வரையறுத்துக் கூறுதலால் இக்காலத்துப்போல அவர் காலத்தில் எல்லாவுருபுகளும் எல்லாவுவமைகட்கும் வழங்கவில்லை யென்பதும், ஆசிரியர் மேற்குறித்தவாறு நியமித்துரைத்தற்கு அவர் காலத்தில் மேற்குறித்த உருபுகள் தத்தம் வரலாற்று நெறியால் வினை முதலிய பொருகள்மேற் பயின்று வழங்கின மையே காரணமென்பதும் நன்கு புலனும். மேற்குறித்த வண்ணம் இவ்வுருபுகள் வினையுவமம் முதலாகத் தத்தமக்குரிய பொருள்கள் மேற் பயின்று வழங்குந்திறத்தைத் தொன்று தொட்டுவரும் சொற் பொருள் மரபு பற்றி யுணர்தல் வேண்டுமென்பது தத்த மரபிற் ருேன்றுமன் பொருளே எனவரும் சூத்திரத்தால் நன்கறியப்படும். மேற்சொல்லப்பட்ட உவமை நான்குவகை யாதலேயன்றி எட்டாக வரும் பகுதியும் உண்டு என்பர் ஆசிரியர். வினையுவமம்