பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 தொல் கர்ப்பியம் நுதலிய பொருள் உவமப் போலியாகிய இவ்வுள்ளுறை ஐந்துவகைப்படு மென்பர். அவையாவன வினை, பயன், மெய், உரு பிறப்பு என்னும் இவ்வைந்தும் பற்றி வருவனவாம். " பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய் வாளை நாளிரை பெறு உம் ஊர எந்நலந் தொலைவ தாயினும் துன்னலம் பெரும பிறர்த் தோய்ந்த மார்பே ” (ஐங்குறு-63) என்பது, பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகளுேடு தலைமகள் புலந்து கூறுவதாக அமைந்ததாகும். இதன் கண், பொய்கை யாகிய தூய இடத்திற் பிறந்த நீர் நாயானது, தான் முதல்நாள் தின்ற வாளைமீனின் புலால் நாற்றத்தோடும் பின்னை நாளிலும் அதனையே விரும்பிப்பெறும் ஊரனே எனத் தலைவனை அழைக்கு முகமாக, அத்தலைவன் நல்ல குலத்திற் பிறந்தும் இழிகுலத்தா ராகிய பரத்தையரைத் தோய்ந்து பின்னும் அவரையே நாடிச் சேர்தலைக் கருதியுணர வைத்தமையின், இது பிறப்புப்பற்றி வந்த உள்ளுறையுவமமாகும். இவையெல்லாம் கருதிக் கூறின் செய் யுட்குச் சிறப்பாதலும், இக்கருத்தின்றி 'நீர் நாய் வாளே பெறு உம் ஊரன் என வறிதே கூறின் ஒருபயனும் இல்லையாதலும் உணர்ந்த பண்டைத் தமிழ்ச் சான்ருேர் இவ்வுள்ளுறை யுவமத் தால் திணையுணரு முறையினைச் சிறப்பாக வற்புறுத்துவாராயினர். வினை, பயன், மெய், உரு என்பனபற்றி வரும் உள்ளுறைகளும் இவ்வாறே கருதியுணரப்படும். தலைமகள் உள்ளுறை யுவமங் கூறின் அவளறிந்த பொருள் பற்றிக் கூறப்படும் எனவும், தோழி கூறுவாளாயின் தான்பயின்ற நிலத்துள்ளன அன்றிப் பிறநிலத்துள்ளன உவமை கூறப்பெருள் எனவும் கூறுவர் ஆசிரியர். எனவே, தலைவி தான் வாழும் நிலத் துள்ளன எல்லாம் அறியுமளவுக்குப் பயிற்சியில்லாதவள் எனவும்,